நிவேதா பெத்துராஜ் கல்யாணம் செய்யப்போகும் நபர் இப்படிப்பட்டவரா? ஆராயும் ஃபேன்ஸ்..

Nivetha Pethuraj Wedding
By Edward Aug 31, 2025 09:30 AM GMT
Report

நிவேதா பெத்துராஜ்

ஒருநாள் கூத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை நிவேதா பெத்துராஜ். இவர் கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி இன்ஸ்டாவில் தனது காதலன் என்று ரஜித் இப்ரானுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்.

இருவரும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கிறாராம். தற்போது நிவேதா பெத்துராஜின் வருங்கால கணவர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நிவேதா பெத்துராஜ் கல்யாணம் செய்யப்போகும் நபர் இப்படிப்பட்டவரா? ஆராயும் ஃபேன்ஸ்.. | Who Actress Nivetha Pethuraj S Future Husband

துபாய் தொழிலதிபரான ராஜித் இப்ரான், மாடலிங் மற்றும் ஃபேஷன் உலகத்துடன் நெருங்கிய தொடர்புடையவராம். உம்ரா பயணம், சொகுசு கார்கள், ஆடம்பர வாழ்க்கை என பல இடங்களில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நிவேதா பெத்துராஜும் கார் பந்தயம் மீது ஈடுபாடு கொண்டவர் என்றும் கார் ரேஸில் கலந்து கொண்ட புகைப்படங்களையும் இணையத்தில் பகிர்ந்திருக்கிறார்.

ராஜித் இப்ரான் துபாயில் வசித்திருந்தாலும் தமிழ் மீது அக்கரை கொண்டவராக இருப்பவர் என்று அவரது இன்ஸ்டா ஐடி பார்த்தே தெரிகிறது என்று நெட்டிசன்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இந்த உலகம் அடுத்த வினாடிக்குள் ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் ஏராளம்’ என்ற வார்த்தையும் பதிவிட்டுள்ளார்.

Gallery