அண்ணன் மரணத்திற்கு காரணமானவரை பழித்தீர்த்த மணிரத்னம்.. விழாவிற்கு வராத ஒரே ஆள் இவர்தான்..

A R Rahman Lyca Mani Ratnam G. N. Anbu Chezhiyan
By Edward Sep 07, 2022 12:55 PM GMT
Report

கல்கி அவர்கள் எழுத்திய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் லைக்கா பிரடொக்ஷன் தயாரிப்பில் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகவுள்ள படம் பொன்னியின் செல்வன். முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

படம் முடிந்ததில் இருந்து பல நிகழ்ச்சிகளை விமரிசையாக நடத்தி வருகிறார்கள் லைக்கா நிறுவனம். நேற்று இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேரு உள் விளையாட்டு ஆரங்கில் பிரம்மாண்ட முறையில் நடைபெற்றது.

படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள், டெக்னிஷியன்ஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல் ஹாசன் உள்ளிட்ட ஜாம்பவான்கள் கூட இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஆனால் நிகழ்ச்சிக்கு படத்தின் சம்பந்தப்பட்ட ஒருவரும் மட்டும் வராதது அதிர்ச்சியை அளித்துள்ளது.

500 பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைக்கா, பிரபல பினான்சியர் அன்பு செழியனிடம் பணம் வாங்கி படத்தினை தயாரித்திருந்தது. இந்நிலையில் நிகழ்ச்சிக்கு லைக்கா நிறுவனம் அன்பு செழியனை அழைக்க வேண்டும் என்று கூறியபோது மணிரத்னம் வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.

இதற்கு காரணம் மணிரத்னத்தின் அண்ணன் ஜி வெங்கடேஸ்வரனின் தற்கொலை மரணம் தான் காரணமாம். அதாவது தயாரிப்பாளராக இருந்து மெளன ராகம், தளபதி, சொக்கத்தங்கம் உள்ளிட்ட பல படங்களை தயாரித்த வெங்கடேஸ்வரன் மதுரை அன்புவிடம் தான் பணம் வாங்கி தயாரித்திருந்தார்.

ஆனால் பணத்தினை அன்பு செழியனுக்கு திருப்பி தரமுடியாததால் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால், மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் தயாரிப்பாளர் ஜி வெங்கடேஸ்வரன்.

தன் அண்ணனின் மரணத்திற்கு அன்பு செழியன் தான் காரணம் என நினைத்து தான் மணிரத்னம் வரக்கூடாது என்று கூறியிருக்கிறாராம்.