சிம்பு - நயன்தாராவுடன் இருக்கும் இந்த நபர் யார் தெரியுமா?புகைப்படம் இதோ..
தமிழில் 2006ல் நடிகர் சிம்பு இயக்கி நடித்த படம் தான் வல்லவன். இப்படத்தில் நடிகை நயன் தாரா, ரீமா சென், சந்தியா, சந்தானம் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து மிகப்பெரிய ஹிட் படமாக மாறியது. இப்படத்தின் மூலம் தான் சிம்புவுக்கும் நயனுக்கும் இடையே காதல் ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் வல்லவன் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்று இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. அப்புகைப்படத்தில் இருக்கும் ஒருவர் தான் யார் என்று பலரும் யூகித்து வருகிறார்கள்.

நெல்சன் திலீப்குமார்
அவர் வேறுயாருமில்லை, தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் ஜெயிலர் 2 படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தானாம். ஆரம்பத்தில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அசிஸ்டெண்ட் ஸ்கிரிப்ட் ரைட்டராக பணியாற்றி, பின் படிப்படியாக சில நிகழ்ச்சிகளில் துணை இயக்குநராக பணியாற்றினார்.
பின் ஜோடி நம்பர் 1, ஏர்ரெட் சூப்பர் சிங்கர், பிக்பாஸ் தமிழ் என ஸ்டார் விஜய் தொலைக்காட்சியின் முக்கிய நிகழ்ச்சிகளை இயக்கியும் தயாரிப்பு குழுவில் பணியாற்றியும் வந்தார்.
அப்படி வல்லன் படத்திலும் இணைந்து சிம்புவுடன் பணியாற்றியிருக்கிறார் நெல்சன். இதன்பின் தான் சிம்புவை வைத்து வேட்டை மன்னன் படத்தினை இயக்க நெல்சன் 2010ல் தொடங்கினார். ஆனால் எதிர்பாராதவிதமான அப்படம் அப்படியே பாதியில் கைவிடப்பட்டது.
தற்போது அப்படி இருந்த மனிதன், இப்போது விஜய், ரஜினி, சிவகார்த்திகேயன் போன்ற சூப்பர் ஸ்டார் நடிகர்களை இயக்கி பிளாக்பஸ்டர் படத்தினை கொடுத்திருகிறார் நெல்சன்.
