ஹைதராபாத்தின் டாப் பணக்காரர் டாக்டர் முரளி கே திவி!! மகள் நீலிமாவின் 10.1 பில்லியன் டாலர் சொத்து..
திவிஸ் லேபரேட்டரீஸ் லிமிடேட்
ஹைதராபாத்தின் மிகப்பெரிய பணக்காரர்களின் ஒருவரான டாக்டர் முரளி கே திவியின் மகள் நீலிமா பற்றிய முழு தகவலை பார்ப்போம். பிரசாத் திவி, ஜெனரிக் மருந்துகளை தயாரிக்கும் திவிஸ் லேபரேட்டரீஸ் லிமிடேட்டில் முழு நேர இயக்குநராக பணியாற்றி வருகிறார் நீலிமா.
இங்கிலாந்தின் கிளாஸ்கோ பலகலைக்கழகத்தில் சர்வதேச நிதியியலில் முதுகலைப் பட்டம் வாங்கிய நீலிமாவின் திவிஸ் லேபரேட்டரீஸ் லிமிடேட்டின் நிகர மூலதனம் 1.63 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறதாம்.
நீலிமா யார்
ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் இன்டெக்ஸின்படி, இவர் 10.1 பில்லியன் அமெரிக்க டாலர் நிகர மதிப்புடன், நாட்டின் பணக்கார ஃபார்மா பில்லியனர்களில் ஒருவராக இருந்து வருகிறார் திவிஸ் லேபரேட்டரீஸ் லிமிடெட்டின் நிறுவனரான டாக்டர் முரளி கே திவி.
தன்னுடைய தந்தையின் இந்த நிறுவனத்தில் சேர்வதற்கு முன் விரிவான வணிக நுண்ணறிவு மற்றும் பொருள் தேவையான திட்டமிடுதல் மற்றும் நிதியுதவி ஆகியவற்றில் பர்ச்சயம் பெற்றிருக்கிறார் நீலிமா.
மேலும், திவிஸ் ஃபவுண்டேஷன் ஃபார் கிஃப்டட் சில்ட்ரன் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலராகவும் நீலிமா பணி செய்து வருகிறார். ஹைதராபாத்தின் புகழ்பெற்ற ஆடம்பர பகுதியான ஜூபிலி ஹில்லில் இரண்டு சொத்துக்களை 80 கோடி ரூபாய்க்கு கடந்த ஆண்டு மே மாதம் வாங்கி அதிரவைத்தார்.