ஒருநாள் விஜய் நடுத்தெருவுக்கு வருவார்!!! உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து சாபம் விட்ட பெண்..

Vijay S. A. Chandrasekhar
By Edward Jan 28, 2023 05:26 AM GMT
Report

தமிழ் சினிமாவில் உச்சக்கட்ட நட்சத்திரமாகவும் மாஸ் நடிகராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய்.

சமீபத்தில் அவர் நடிப்பில் வாரிசு படம் வெளியாகி 250 கோடிக்கும் மேல் வசூலித்து வருவதாக செய்திகள் வெளிவந்தது. இதற்கிடையில் விஜய்யை பலர் விமர்சித்தும் பேசி வருகிறார்கள்.

அந்தவகையில் சமீபத்தில் ஒரு பெண் விஜய் ஒருநாள் நடுத்தெருவுக்கு வருவார் என்று சாபம் விட்டு கத்திய ஒரு பெண்ணின் வீடியோ வெளியாகி வைரலானது.

அவர் வேறு யாரும் இல்லை விஜய்யின் ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் அவரின் வீட்டில் வேலை செய்து அதன்பின் விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகியாக இருந்தவரின் உறவினர் பெண் தானாம்.

விஜய்யுடன் இருந்த ஏசி குமார் என்பவர் விஜய்யின் தந்தையுடன் சேர்ந்து அரசியல் உள்கட்டத்திற்கு கொண்டு வர முற்பட்டதால் விஜய் நன்றி இல்லாமல் வேலையை விட்டு தூக்கியுள்ளார்.

இதனால் கஷ்டப்பட்ட ஏசி குமார் நடுத்தெருவுக்கு வரும் நிலைக்கு வந்துள்ளார். இவர்களால் தான் விஜய்க்கும் எஸ் ஏ சிக்கும் இடையில் பிரச்சனையை ஏற்படுத்தியது என்றும் சிலர் கூறி வருகிறார்கள்