முகேஷ் அம்பானி - நீடா தம்பதியின் வாரிசுகளில் யார் பணக்காரர் தெரியுமா? சொத்து மதிப்பு..
இந்தியாவின் டாப் பணக்காரர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் முகேஷ் அம்பானி பல லட்சம் கோடி சொத்துக்கு சொந்தக்காரராக திகழ்ந்து வருகிறார். அம்பானி குடும்பத்தினர் எது செய்தால் உலகளவில் பேசப்படும்.
அந்தவகையில் முகேஷ் அம்பானி - நீடா தம்பதியினரின் வாரிசுகளாக இருக்கும் ஆகாஷ் அம்பானி, இஷா அம்பானி, அனந்த் அம்பானி யார் யார் எந்த பதவியில் இருக்கிறார்கள் என்று பார்ப்போம்.
ஆகாஷ் அம்பானி
இஷா அம்பானியின் இரட்டை சகோதரான ஆகாஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடேட்டின் த்லைவராகவும், ரிலையன்ஸ் ரீடெய்ஸ் வென்ச்சர்ஸ் லிமிடேட்டின் இயக்குநராகவும் திகழ்ந்து ஆண்டுக்கு ரூ. 5.6 கோடி சம்பளமாக பெறுகிறார். அவருடைய நிகர சொத்து மதிப்பு 40.1 பில்லியன் டாலர். இந்திய மதிப்பில் சுமார் ரூ. 3,32,830 கோடியாகும்.
இஷா அம்பானி
ஆகாஷ் அம்பானியின் இரட்டை சகோதரியான இஷா அம்பானி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடேட் நிறுவனத்தின் நிர்வாகமற்ற இயக்குநராகவும் ரிலையன்ஸ் ரீடெய்ல், ரிலையன்ஸ் ஜியோ, ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன், திருபாய் அம்பானி இண்டர்நேஷ்டல் ஸ்கூலின் தலைமை குழுவில் இருந்து வருகிறார்.
தீரா பியூட்டி நிர்வாக இயக்குநராகவும் இணைய நிறுவனராகவும் திகழ்ந்து வரும் இஷா அம்பானியின் ஆண்டு வருமானம் ரூ.4.2 கோடியாகும். ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியலில் 31வது இடத்தில் இருக்கும் இஷா அம்பானியின் சொத்து மதிப்பு 800 கோடியாம்.
அனந்த் அம்பானி
முகேஷ் அம்பானியின் கடைசி மகன் அனந்த் அம்பானிக்கு கடந்த ஆண்டு பிரம்மாண்ட முறையில் திருமணம் நடந்தது. அவர் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடேட் மற்றும் ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் லிமிடேட் ஆகியவற்றின் இயக்குநராக பணியாற்றி ஆண்டுக்கு ரூ.4.8 கோடி வருமானம் பெறுகிறார். அவரின் சொத்து மதிப்பு 40 பில்லியன் டாலராகும். இந்திய மதிப்பில் ரூ.33200 கோடி என்று கூறப்படுகிறது.