இந்தியாவின் பணக்கார சமையல் கலைஞர் இவர்தான்!! ஆனா மாதம்பட்டி ரங்கராஜ்?
இந்தியாவில் சமையல் உலகம் என்பது சுவைக்கு மட்டும் அங்கீகாரம் கொடுப்பது மட்டுமல்ல, அது மிகப்பெரிய சாம்ராஜ்யங்களையும் உருவாக்கியுள்ளது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் முதல் உலகம் தரம் வாய்ந்த உணவகங்கள் வரை, பல புகழ்பெற்ற சமையல் கலைஞர்களின் திறமையை பன்னாட்டு வணிகமாக மாற்றியுள்ளனர்.

இந்திய மொழிகளில் சமையல் சார்ந்த நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு ஏராளமான மக்கள் ஆர்வமாகவுள்ளனர். அதனால் தான் ஒவ்வொரு சேனலிலும் சமையல் தொடர்பான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பட்டு வருகிறது.
பணக்கார சமையல் கலைஞர்
அப்படி இந்தியாவின் நம்பர் 1 பணக்கார சமையல் கலைஞர் என்ற பெருமையை பெற்றுள்ளார் சஞ்சீவ் கபூர்.
இந்திய சமையல் உலகில் சஞ்சீவ் கபூர், தனிப்பெரும் நிறுவனம் என்றே சொல்லலாம். 1990ல் கானா கஜானா என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் இல்லத்தரசிகள் மத்தியில் பிரபலமாகி, ஆசியாவிலேயே நீண்டகாலம் (17 ஆண்டுகள்) ஒளிப்பரப்பான சமையல் நிகழ்ச்சி என்ற பெயரை அவரது நிகழ்ச்சி பெற்றது. ஹெல்லோ சில்லி என்ற பெயரில் உணவகங்கள், 150க்கும் மேற்பட்ட சமையல் புத்தகங்கள், சமையலறை உபகரணங்கள் என தனது வணிகத்தை விரிவுப்படுத்தியிருக்கிறார். அவரின் நிகர சொத்து மதிப்பு சுமார் ரூ. 1165 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

அவரை தொடர்ந்து அமிர்தசரஸ் முதல் நியூயார்க் வரை பயணித்து பல விருதுகளை வென்ற சமையல் கலைஞர் விகாஸ் கண்ணா தான் இருக்கிறார். அவரின் சொத்து மதிப்பு சுமார் 84 கோடி முதல் 127 கோடி வரை இருக்குமாம்.
Michelin Star என்ற விருதினை வாங்கிய முதல் இந்தியப்பெண் என்ற பெருமையை பெற்ற கரிமா அரோரா, ரூ. 40 கோடி சொத்து மதிப்பை வைத்துள்ளார்.
மாஸ்டர் செஃப் இந்தியா நிகழ்ச்சியின் நடுவராக இருந்து வரும் ரன்வீர் பிரார், மாத வருமானமாக ரூ. 45 லட்சம் பெற்று ரூ. 41 கோடி சொத்து மதிப்பை வைத்துள்ளார்.
மாஸ்டர் செஃப் இந்தியா நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் குனால் கபூர், சமையல் நிகழ்ச்சி, விளம்பரங்கள், உணவகங்கள் மூலம் ரூ. 8.71 கோடி ரூபாய் சொத்துக்களை சேர்த்துள்ளார்.

தமிழ்நாட்டில் பிரபலங்கள் அரசியல்வாதிகளின் திருமணத்தினை சிறப்பான சமையல்களை கொடுத்து பிரபலமான மாதம்பட்டி ரங்கராஜ், 2024 ஆம் ஆண்டின் தரவுகளின் படி, நிகர சொத்து மதிப்பு சுமார் ரூ. 33 கோடி என்று தோராயமாக மதிப்பிடப்பட்டுள்ளதாம்.