கையில் செல்போன் இருந்தால், பிரம்மாக்களா? திருந்தணும்!! நடிகை ஆலியா பட்..
Alia Bhatt
Gossip Today
Tamil Actress
Actress
By Jai
ஆலியா பட்
பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை ஆலியா பட், ரன்பீர் கபூரை திருமணம் செய்து ஒரு குழந்தைக்கு அம்மா ஆன பின்பும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் ஆலியா பட் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பேசிய விஷயம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அதில், கையில் செல்போன் இருந்தால், பிரம்மாக்கள் என்று சில நினைத்து விடுகிறார்கள். சினிமா பிரபலங்களை குறிப்பாக, நடிகைகளை பற்றி அவதூறாக பேசி ஆனந்தம் கொள்கிறார்கள்.
இதெல்லாம் எவ்வளவு மோசமான விஷயம் தெரியவில்லையா? தன் ரசிகர்களை மகிழ்விக்க நடிகைகள் பல கஷ்டங்களை தாங்கிக் கொள்கிறார்கள். அந்த நடிகைகளை கொண்டாட மனம் வரவில்லை என்றாலும் பரவாயில்லை, தவறாக பேசாமல் இருக்கலாமே? இனியாவது அப்படிப்பட்ட நபர்கள் திருந்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன் என்று ஆலியா பட் பேசியுள்ளார்.