விளம்பரத்தால் கிடைத்த வாய்ப்பு! டயானா நயன் தாராவாக மாறிய இப்படித்தானா?

Nayanthara Kaathuvaakula Rendu Kaadhal
By Edward May 08, 2022 09:20 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகை நயன் தாரா. ஐய்யா படத்தில் கொடுத்த நல்ல பேர் அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஆரம்பித்தார் தற்போது நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் படங்களை தேர்வு செய்து வருகிறார் நயன் தாரா.

முன்னணி நடிகர்களாக இருந்தாலும் சரி அறிமுகமாகும் நடிகர்களாக இருந்தாலும் எந்தவொரு பாகுபாட்டினையும் காட்டாமல் நடித்து கொடுப்பார். சமீபத்தில் அண்ணாத்த படத்திற்கு பிறகு தன் ஆசை காதலர் இயக்கிய காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து மிகப்பெரிய ஹிட் கொடுத்துள்ளார்.

கூடிய சீக்கிரமே இயக்குனர் விக்னேஷ் சிவனை ஜூன் மாதம் கல்யாணம் செய்யவுள்ளார் நயன் தாரா. அப்படி பல ஹிட் படங்களை கொடுத்த நயன் தாரா முதன்முதலில் மலையால படமான மனசினக்கரே (Manassinakkare) என்ற படத்தில் நடித்து அறிமுகமாகினார்.

சத்தியன் அந்திக்காடு என்பவர் இயக்கிய இப்படத்தில் நடிகர் ஜெயராமுக்கு ஜோடியாக நடிகை நயன் தாரா நடித்து அறிமுகமாகினார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் இப்படத்தின் இயக்குனர் நயன் தாரா பற்றி கூறியுள்ளார்.

ஒரு நகை விளம்பரத்தில் நடித்த நயன் தாராவை பத்திரிக்கை ஒன்றில் பார்த்துவிட்டு அவரை தொடர்பு கொண்டேன். ஒரு கட்டத்தில் உறவினர்கள் சம்மதம் தெரிவிக்காமல் இருந்தார்கள். ஆனால் அவர்களின் பெற்றோருக்கு பிடித்ததால் அவர்களின் ஒப்புதல் கொண்டு அப்படத்தில் நடிக்க வைத்தேன்.

டயானா என்ற அவரது பெயரை நயன் தாரா என்று சினிமாவில் பெயரை மாற்றி அறிமுகம் செய்தேன் என்றார். அப்படத்திற்கு பிறகு தமிழ், மலையாளம் , தெலுங்கு மொழிகளில் நடிக்க கமிட்டாகி தற்போது ஏடி சூப்பர் ஸ்டாராக மாறிவிட்டார்.