தனுஷுடன் சண்டை.. மனைவியுடன் விவாகரத்து!! வெளிப்படையாக பேசிய ஜிவி பிரகாஷ் குமார்..

Dhanush G V Prakash Kumar Gossip Today Saindhavi
By Edward Dec 06, 2024 04:56 AM GMT
Report

ஜிவி பிரகாஷ் குமார்

தமிழ் சினிமாவில் வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி அடுத்தடுத்த வெற்றிப்படங்களில் இசையமைத்து முக்கிய இடத்தினை பிடித்தவர் ஜிவி பிரகாஷ் குமார். சூரரை போற்று படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருதினை பெற்றார்.

தனுஷுடன் சண்டை.. மனைவியுடன் விவாகரத்து!! வெளிப்படையாக பேசிய ஜிவி பிரகாஷ் குமார்.. | Why Did You Leave Dhanush Divorce Gv Prakash React

தற்போது பல படங்களில் இசையமைத்து வரும் ஜிவி பிரகாஷின் 100வது படத்தினை சுதா கொங்கரா இயக்கவுள்ள படத்தில் இணைந்துள்ளார். இதற்கிடையில் தன் மனைவியும் பாடகியுமான சைந்தவியை சமீபத்தில் பிரிவதாக கூறி அதிர்ச்சி கொடுத்தார். என்னதான் பிரிந்தாலும் இருவரும் ஒரே கச்சேரியில் இணைந்து பாடவும் இருக்கிறார்கள்.

மனைவியுடன் விவாகரத்து

இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், தன் மனைவியை பிரிந்தபோது எந்தளவிற்கு அந்த அழுத்தம் மனதளவில் வேலைகளை பாதித்தது என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். அதில், சினிமா வாழ்க்கை என்று வரும்போது சொந்த வாழ்க்கை வேறு தொழில் வேறு என்பதை புரிந்துக்கொண்டு தான் வரவேண்டும்.

ஒரு வேளை சொந்த வாழ்க்கையில் உள்ள பிரச்சனை தொழிலை பாதித்தால் நாம் வீழ்ச்சி அடைந்துவிடுவோம். வேலை என்று வந்தால் சொந்த பிரச்சனையை ஓரங்கட்டிவிடுவேன். அப்படியான மனநிலை எனக்கு இருக்கிறது. நாம் மனதளவில் தளர்ந்துவிட்டால், வேலையை கவனிக்க முடியாது.

தனுஷுடன் சண்டை.. மனைவியுடன் விவாகரத்து!! வெளிப்படையாக பேசிய ஜிவி பிரகாஷ் குமார்.. | Why Did You Leave Dhanush Divorce Gv Prakash React

யார் யார் என்ன பேசுகிறார்கள் என்பதை கேட்கவே நேரத்தை செலவிட வேண்டியிருக்கும். நன் அடுத்தவர் தட்டில் என்ன இருக்கிறது என்று பார்க்கமாட்டேன். என் தட்டில் என்ன இருக்கும் என்பதுதான் முக்கியம் என கூறியிருக்கிறார்.

தனுஷுடன் சண்டை

மேலும் தனுஷுடன் சில காலம் மன வருத்தத்தில் இருந்தது பற்றிய கேள்விக்கு கணவன் மனைவிக்கு சண்டை வந்தப்பின் மீண்டும் சேர்வதில்லை, நண்பர்களுக்குள் ஏற்படும் கருத்து முரண்பாடுகள் சில ஆண்டுகளில் சரியாக இணைவது இல்லையா? அதேபோல் தான் இது என்று ஜிவி பிரகாஷ் குமார் ஓப்பனாக பேசியிருக்கிறார்.