பிரின்ஸ் தோல்விக்கு இது தான் காரணம்.. மேடையில் போட்டுடைத்த தயாரிப்பாளர்

Sivakarthikeyan Prince (2022)
By Parthiban.A Nov 07, 2022 02:00 PM GMT
Report

நடிகர் சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களான டாக்டர், டான் ஆகியவை நல்ல வசூல் ஈட்டிய நிலையில் கடந்த தீபாவளிக்கு ரிலீஸ் ஆன பிரின்ஸ் படம் மண்ணை கவ்வியது. அதிக எதிர்பார்ப்பில் சென்ற ரசிகர்களுக்கு அந்த படம் சற்று ஏமாற்றத்தை கொடுத்தது.

சிவகார்த்திகேயன் படத்தை பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்தாலும் வசூல் குறைந்த அளவே வந்தது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் தோல்விக்கு யார் காரணம் என தயாரிப்பாளர் கே. ராஜன் ஒரு பட விழாவில் பேசி இருக்கிறார்.

ஒரு படம் வெற்றி அடைந்தால் அதற்கு காரணம் ஹீரோ என சொல்கிறோம். ஆனால் இயக்குனர் தான் உண்மையான காரணம். அதே படம் தோல்வி அடைந்தாலும் இயக்குனர் தான் காரணம். அவர் எங்கயோ கோட்டை விட்டுட்டார் என அர்த்தம் என கே ராஜன் கூறி இருக்கிறார்.

 பிரின்ஸ் தோல்விக்கு இது தான் காரணம்.. மேடையில் போட்டுடைத்த தயாரிப்பாளர் | Why Sivakarthikeyan S Prince Movie Flopped