பட வாய்ப்பு போராட்டம்..மனைவிக்கு 6 முறை புற்றுநோய் பாதிப்பு!! நடிகர் ஷாரிப்பின் மறுப்பக்கம்..
ஷாரிப் ஹாஷ்மி
தி பேமிலிமேன் வெப் தொடரில் ஜேகே என்ற ரோலில் நடித்து பிரபலமானவர் தான் நடிகர் ஷாரிப் ஹாஷ்மி. அவரது நிஜ வாழ்க்கையில் நடந்த சம்பவம் ஒன்று பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஷாரிப் மற்றும் அவரது மனைவி நஸ்ரீன் இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். குடும்ப கஷ்டத்தால் வருமானத்திற்கான உறுதியோ, சரியான வேலையோ இல்லாதபோது இரு வீட்டாரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அந்த சமயத்தில் ஷாரிப் மாதம் 15 ஆயிரம் ரூபாய் சம்பாதிப்பதாக கூறி திருமணத்திற்கு சம்மதம் வாங்கியுள்ளார். 2003ல் இருவர்கள் இருவரும் திருமணம் செய்தப்பின் வாழ்க்கை அவ்வளவு எளிதாக அமையவில்லை. ஷாரிப்பிற்கு சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற ஆசையில் வேலையை விட்டுள்ளார்.
ஒரு பக்கம் குடும்பத்தை நடத்த வேண்டிய பொறுப்பு, இன்னொரு பக்கம் சினிமாவில் வெற்றிப்பெற வேண்டும் என்ற கனவு. அப்போது நஸ்ரீன் தன் கணவரின் கனவுக்காக துணை நின்று, நகைகளையும் சொந்த வீட்டையும் விற்று பொருளாதார சிக்கலை சந்தித்துள்ளனர்.

மனைவிக்கு 6 முறை புற்றுநோய்
அந்த சமயத்தில் அவர்களுடைய குடும்பத்தினரும் நண்பர்களும்கூட உதவி செய்யாதபோதும் 10 ஆண்டு போராட்டத்திற்குப்பின் ஷாரிபுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்தது. தி பேமிலி மேன் வெப் தொடரில் ஜேகே ரோலில் நடித்து நல்ல அடையாளத்தை கொடுத்த சந்தோஷத்தில் இருந்த ஷாரிப்பிற்கு பெரிய இடி ஒன்று வந்தது. 2018ல் மனைவி நஸ்ரீன்க்கு வாய் புற்றுநோய் உறுதியாகியுள்ளது. தி பேமிலி மேன் ரிலீஸ் சமயத்தில் அதை ஷாரிப்புக்கு சொல்லாமல் மறைத்துள்ளார்.

அதன்பின் மனைவிக்கு இப்படியான நோய் இருப்பது ஷாரிப்புக்கு தெரிய வந்துள்ளது. மனைவிக்காக ஷாரிப் துணையாக இருந்து கவனித்ததில் நஸ்ரீன்-க்கு 6வது முறையாக புற்றுநோய் மீண்டும் வந்துள்ளது. ஏற்கனவே பலமுறை அறுவை சிகிச்சை, ட்ரீட்மெண்ட் செய்த நிலையில், இம்முறை நோய் அதிகமாக பரவியதால் தீவிர சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இந்த சம்பவத்தை ஷாரிப், நஸ்ரீன் இருவரும் பேட்டியொன்றில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.