வைல்டு கார்டு போட்டியாளர்களுக்கு சம்பளத்தை வாரி வழங்கும் பிக் பாஸ்.. ஒரு நாளைக்கு இவ்வளவா

Vijay Sethupathi Tamil TV Shows Bigg Boss Tamil 8
By Bhavya Nov 13, 2024 09:37 AM GMT
Report

பிக் பாஸ் 

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 8ல் இதுவரை நான்கு போட்டியாளர்கள் வெளியேறியுள்ள நிலையில், 18 போட்டியாளர்களில் வேறும் 14 போட்டியாளர்களே பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தனர்.

இந்த சீசன் சுத்தமாக சுவாரஸ்யமே இல்லாமல் சென்று கொண்டிருந்த நிலையில், சற்று தூக்கி நிறுத்த சிவாஜி தேவ், ராணவ், வர்ஷினி வெங்கட், மஞ்சரி என ஆறு வைல்டு கார்டு போட்டியாளர்கள் என்ட்ரி கொடுத்துள்ளனர்.

வைல்டு கார்டு போட்டியாளர்களுக்கு சம்பளத்தை வாரி வழங்கும் பிக் பாஸ்.. ஒரு நாளைக்கு இவ்வளவா | Wild Card Contestants Salary

போட்டியாளர்கள் சம்பளம் 

இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் எண்ட்ரியாகி இருக்கும் 6 போட்டியாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வில்லனாக நடித்து பிரபலமான நடிகர் ராயனுக்கு ஒரு நாளைக்கு ரூ.15 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படுகிறது.

வைல்டு கார்டு போட்டியாளர்களுக்கு சம்பளத்தை வாரி வழங்கும் பிக் பாஸ்.. ஒரு நாளைக்கு இவ்வளவா | Wild Card Contestants Salary

இவரை தொடர்ந்து, ஷிவக்குமார், ராணவ் மற்றும் வர்ஷினி வெங்கட் ஆகியோருக்கு தலா ரூ.12 ஆயிரம் சம்பளமாக ஒரு நாளைக்கு வழங்கப்படுகிறதாம்.

எஞ்சியுள்ள ரியா மற்றும் மஞ்சரி ஆகியோர் ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது. இதன் மூலம், அதிக சம்பளம் வாங்குவது ராயன் என்பது குறிப்பிடத்தக்கது.