விஜய் ஆண்டனிக்கு இப்படி ஒரு சோதனையா.. மீண்டு வருவாரா

Vijay Antony Actors
By Tony Sep 29, 2024 10:30 AM GMT
Tony

Tony

Report

விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் ஒரு இசையமைப்பாளராக அறிமுகமானார். அதை தொடர்ந்து பல ஹிட் ஆல்பங்களை கொடுத்த இவர் நான் படத்தின் மூலம் ஹீரோவாக காலடி எடுத்து வைத்தார்.

அதை தொடர்ந்து சலீம், எமன், சைத்தான், பிச்சைக்காரன் என தொடர் வெற்றி படங்களை கொடுத்தார். ஆனால், அதன் பின் இவருக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை, நடிக்கும் அனைத்து படங்களும் கடும் தோல்வியை சந்தித்து வருகிறது.

விஜய் ஆண்டனிக்கு இப்படி ஒரு சோதனையா.. மீண்டு வருவாரா | Will Vijay Antony Give Come Back In Cinema

இந்நிலையில் நீண்ட நாட்கள் கழித்து பிச்சைக்காரம் 2 படம் மூலம் கம்பேக் கொடுத்தார். அப்படம் நல்ல வெற்றியை பெற்றது. ஆனால், அதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான கொலை, ரத்தம், ரோமியோ, மழை பிடிக்காத மனிதன் என தொடர் தோல்வி படங்களில் கொடுத்து வருகிறார்.

சமீபத்தில் வந்த ஹிட்லர் படம் கூட பெரிய வரவேற்பு பெறாத நிலையில், விஜய் ஆண்டனி மீண்டு வருவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.