பிக்பாஸ் 4ன் டைட்டிலை கைப்பற்றிய ஆரி.. யாரும் எதிர்பாராத அளவிற்கு வாக்கு வித்தியாத்தில் பாலாஜி ரன்னர்..

bigboss aari session end
By Jon Jan 18, 2021 04:42 PM GMT
Report

அனைவரும் ஆவலோடு எதிர்ப்பார்த்த பிக்பாஸ் சீசன் 4ன் வெற்றியாளர் யார் என்பதுதான். இறுதிவரை இருந்த ஆரி மற்றும் பாலாஜியில் ஆரி 16 கோடி வாக்குகளோடு டைட்டிலை கைப்பற்றியுள்ளார். முதலாவதாக பிக்பாஸ் 3 சீசனின் வெற்றியாளர் முகேன் வீட்டிற்குள் வந்து டாஸ்க்குளை கொடுத்து இறுதி போட்டியை உற்சாகப்படுத்தினார்.

அவரின் கொடுத்த அதாவது 5 போட்டியாளர்களில் யார் ஐந்தாம் இடத்தினை பிடிப்பார் என்ற இக்கட்டான இடத்தினை முகேன் முன்னின்று வழி நடத்தியதில் சோம் பிடித்து வெளியேறினார். சுமார் 3.3 கோடி வாக்குகளோடு வெளியேறி நிகழ்ச்சியை சக பிக்பாஸ் 4 பிரபலங்களுடன் பார்த்து கொண்டு வருகிறார்.

அவரை தொடர்ந்து நடிகை ரம்யா பாண்டியன் 3.7 கோடி வாக்குகள் பெற்று 4ஆம் இடத்தினை பெற்று வெளியேறியும், அவரை தொடர்ந்து ரியோ 4+ அதற்கு சமமான வாக்குகளுடனும் 3 ஆம் இடத்தினை பெற்றுள்ளாராம். மேலும் யார் வின்னர் ரன்னர் என்ற வாக்குகளில் பாலாஜி வெறும் 6+ வாக்குகளையே பெற்று இரண்டாம் இடம்பிடித்து பிக்பாஸ் 4ன் ரன்னராக வந்துள்ளார்.

அவரை தொடர்ந்து யாரும் எதிர்பாராத விதமாக ஆரி சுமார் 16 கோடி வாக்குகள் பெற்று பிக்பாஸ் டைட்டிலை கைப்பற்றி வீட்டிற்கு சென்றுள்ளார்.