வின்னர் ஆரி! கோப்பை எடுத்து சென்று எடுத்து வந்த முகேன்! சப்ரைஸ் கொடுத்த கவின்! அப்ப அவங்க எங்கே?

aari television vijaytv
By Jon Jan 19, 2021 09:49 AM GMT
Report

பிக்பாஸ் 4 சீசன் கடைசி தருணத்தை நெருங்கி யார் வெற்றியாளர் என்ற செய்தியை அறிவிக்க இருக்கிறது. அந்தவகையில் 5 போட்டியாளர்களில் பிக்பாஸ் போட்டியாளர் சோம் 5ஆம் இடத்தினை பிடித்து வெளியேறினார். அவரை வெளியேற்ற முன்னாள் பிக்பாஸ் சீசன் 3ன் வின்னர் முகேவ் வந்து பிக்பாஸ் கோப்பையோடு வந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தினார்.

முகேனை தொடர்ந்து அடுத்த 4ஆம் இடத்தினை பிடிக்கும் போட்டியாளர் யார் என்று மக்களின் தீர்ப்பை அறிவிக்க வீட்டிற்குள் தீர்மானித்து சொல்ல முன்னாள் பிக்பாஸ் 3ன் போட்டியாளர் கவின் உள்ளே வந்துள்ளார். தன்னிடைய பிக்பாஸ் அனுபவங்களை உலக நாயகன் கமலிடமும் பிக்பாஸ் 4 போட்டியாளர்களுடன் வீட்டிற்குள் சென்று பேசியும் வந்துள்ளார் கவின்.

தற்போது கவின் வீட்டிற்குள் சென்றதை இணையத்தில் ரசிகர்கள் பார்த்து அப்போ அவங்க எங்கே என்று லோஸ்லியாவை மறைமுகமாக கேட்டு வருகிறார்கள்.