வசூல் வேட்டையாடும் வித் லவ் படம்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
Box office
With Love
By Kathick
கடந்த வருடம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற படம் தமிழ் படங்களில் ஒன்று டூரிஸ்ட் பேமிலி.
வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியிருந்த இப்படத்தை இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியிருந்தார். முதல் படத்தில் இயக்குநராக வெற்றிகண்ட அபிஷன், தற்போது 'வித் லவ்' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார்.

இப்படத்தை அறிமுக இயக்குநர் மதன் இயக்க சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்க மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
கடந்த வாரம் திரைக்கு வந்த இப்படத்திற்கு மக்கள் அமோக வரவேற்பை கொடுத்துள்ளனர். இந்த நிலையில், 4 நாட்களில் வித் லவ் படம் உலகளவில் ரூ. 12.6 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.