கேன்ஸ் விருதுவிழாவில் நிர்வாணமாக ஓடிவந்த பெண்! சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ..
உலக புகழ் பெற்ற திரைப்பட விருதாக கருதப்படும் கேன்ஸ் விருது தற்போது 75 வது விருதுவிழாவை பிரான்ஸில் நடைபெற்று வருகிறது. 17 ஆம் தேதி ஆரம்பித்த இந்த விழா வரும் 28 வரை நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சிக்காக உலகத்தில் இருக்கும் பிரபல கலைஞர்கள் கலந்து கொண்டு வருகிறார்கள். இந்திய நாட்டில் ஐஸ்வர்யா ராய் ஆரம்பித்து தென்னிந்தியாவில் கமல்ஹாசன், ஏ ஆர் ரகுமான், பா ரஞ்சித், பூஜா ஹெக்டே, தமன்னா உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் மிகவும் கவுரவமாக கருதப்படும் சிவப்பு கம்பள வரவேற்பில் பல்வேறு திரையுலக கலைஞர்கள் நடந்து வருவார்கள். இந்நிலையில் நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருக்கும் போது திடிரென பெண் ஒருவர் ஆடையேதும் இன்றி நிர்வாண முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் பரபரப்பாகிய அந்த இடத்தில் இருந்து பாதுகாவலர்களாக அப்புறப்படுத்தப்பட்டார் அப்பெண். அவர் உடலில் எங்கலை கற்பழிப்பதை நிறுத்துங்கள் என்ற வசனத்தை எழுதியபடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதை அறிந்துள்ளனர்.
மேலும் ரஷ்ய ராணுவத்தினரால் உக்ரைன் பெண்கள் கற்பழிக்கப்படுவதாகவும் அதற்கான எதிர்ப்பை இப்பெண் கேன்ஸ் விழாவில் தெரியப்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
⚡️ The crisis in Ukraine took the spotlight at the 75th #CannesFilmFestival when a protester, naked and painted in the colors of the Ukrainian flag, took off her gown and ran across the red carpethttps://t.co/KheZJe98Qu
— Reuters Showbiz (@ReutersShowbiz) May 20, 2022