உலகின் மிகப்பெரிய லிஃப்ட் இதுதான்!! எங்கு தெரியுமா?
முகேஷ் அம்பானி
உலகின் டாப் பணக்காரர்கள் லிஸ்ட்டில் 18வது இடத்தில் இருப்பவர் தான் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் நிறுவனத்தின் மூலம் பல தொழில்களை செய்து 92.5 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்பு சேர்த்து வைத்துள்ளார்.
அம்பானி குடும்பம் எது தொட்டாலும் சரி பிரமாண்ட முறையில் தான் அதை செய்வார்கள். அப்படி அவர்களின் ரூ. 15 ஆயிரம் கோடி மதிப்புள்ள மும்பை அண்டிலியா வீடு உலகமே திரும்பி பார்க்கும் வீடாக இருக்கிறது.
Nita Mukesh Ambani Cultural Centre லிஃப்ட்
பல ஆடம்பர வசதிகள் கொண்ட அண்டிலியா ஒரு பக்கம் இருக்க, அம்பானியின் மனைவி நிதா அம்பானி நடத்தி வரும் கலாச்சார மையத்தில் இருக்கும் லிஃப்ட்பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
Nita Mukesh Ambani Cultural Centre கட்டிடத்தில் இருக்கும் இந்த லிஃப்ட் தான் உலகின் அதிக நபர்கள் செல்லக்கூடிய லிஃப்ட்-ஆக திகழ்கிறது. சுமார் 200 பேருக்கும் மேற்பட்டோர் இந்த லிப்ட்டில் செல்ல முடியுமாம். இதேபோல் KONE நிறுவனத்தின் மிகப்பெரிய லிஃப்ட் அம்பானியின் ஜியோ அலுவலகத்திலும் இருப்பதாக கூறப்படுகிறது.

