400 பில்லியன் டாலர் சொத்து!! 3மனைவி, 13 வாரிசுகளுடன் ராஜவாழ்க்கையில் எலான் மஸ்க்..
எலான் மஸ்க்
உலகின் நம்பர் 1 பணகாரராகவும் அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகத்தில் முக்கிய நபராகவும் இருந்து வருபவர் எலான் மஸ்க். மின்சார வாகனம், விண்வெளி தொழில்நுட்பம், சுரங்கப்பாதை தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பலவேறு துறைகளிலும் கால்பதித்து சாதித்தும் சம்பாதித்தும் வருகிறார் மஸ்க்.
அவருக்கு சுமார் 400 பில்லியன் டாலருக்கும் மேல் இருப்பதாக கூறப்படுகிறது. இத்தனை கோடி சொத்துக்களுக்கு வாரிசாக இருக்கும் அவரது குழந்தைகள் பற்றி தற்போது தெரிந்து கொள்ளலாம்.
3 மனைவிகள்
எலான் மஸ்கின் முதல் மனைவி ஜஸ்டின் வில்சன், அவருக்கு 6 பிள்ளைகள். இவர்களின் முதல் குழந்தை மரணமடைந்ததை தொடர்ந்து ஐவிஎஃப் சிகிச்சை மூலம் இரட்டை குழந்தைகளையும் 2வது முறை 3 குழந்தைகளை ஒரே பிரசவத்தில் பெற்றும் இருந்தனர்.
இரண்டாவது மனைவி கிரைம்ஸ், அவருக்கு 3 குழந்தைகள். வாடகைத்தாய் மூலம் இருவரும் குழந்தை பெற்றுள்ளனர்.
மூன்றாவது மனைவி ஷிவான் ஸில்லிஸ், அவருக்கு 3 குழந்தைகள். முதலில் இந்த தம்பதினருக்கு இரட்டை குழந்தை 2021ல் பிறக்க, 2023ல் மஸ்கின் சுயசரிதை புத்தகத்தில் 2022ல் குழந்தை பிறந்ததாகவும் கூறயுள்ளனர். ஆனால் குழந்தை பொது வெளியில் காட்டவில்லை.
பின் எலான் மஸ்க் 2024ல் தனக்கு 12வது குழந்தை பிறந்ததாக கூறியிருந்தார். ஆனால் குழந்தை குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை. அப்படி தன்னுடைய 12 வாரிசுகளுடன் பல கோடி மதிப்பில் உருவாகியுள்ள பங்களாவில் ராஜவாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.
எழுத்தாளர் ஆஷ்லே
தற்போது 2025ல் எழுத்தாளர் ஆஷ்லே செயிண்ட் கிளேர் என்பவரை தனக்கும் எலான் மஸ்கிற்கும் ஒரு குழந்தை 2024 ஆம் ஆண்டு இறுதியில் பிறந்ததாக அறிவித்தார். ஆனால் இந்த குழந்தை குறித்த எந்த விவரங்களும் பொதுவெளியில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
