90ஸ் பேவரைட் ஹல்க் ஹோகன் மரணம்!! அதிர்ச்சியில் WWE ரசிகர்கள்..
உலகில் இருக்கும் 90ஸ் கிட்ஸ்களின் பேவரட் ஷோவாக இருந்து பல கோடி ரசிகர்களை ஈர்த்து வரும் நிகழ்ச்சி என்றால் அது WWE தான்.
ஸ்டேஜிங் ரியாலிட்டி ஷோ என்று சொன்னாலும், அதில் ஸ்டண்ட் செய்ய அவர்கள் தங்கள் உடலை வலுப்படுத்துவது மட்டுமின்றி சண்டை பயிற்சிகளை கற்றுக்கொண்டு அதிரடி காட்டி உலகளவில் ஏகப்பட்ட ரசிகர்களை ஈர்த்து வருகிறார்கள்.
ஹல்க் ஹோகன்
அப்படி பிரபலமானவர் பலர் இருந்தாலும், அதை வைத்து டிரம்ப் கார்ட் விளையாடும் போது ஹல்க் ஹோகன், ராக், அண்டர்டேக்கர், கேன், பிக் ஷோ, ரிக்கிஷி, ஜான் சீனா கார்டுகள் எல்லாம் வந்தால் கொண்டாடுவார்கள் நம்ம 90ஸ் கிட்ஸ்கள்.
அந்தவகையில் பலரை பந்தாடிய ஹல்க் ஹோகன் 71 வயதில் நேற்று ஜூலை 24 ஆம் தேதி இரவு காலாமானார். அமெரிக்காவில் ஜார்ஜியாவில் உள்ள அகஸ்தியாவில் 1953 ஆகஸ்ட் 11 ஆம் தேதி பிறந்தவர் தான் டெரி ஜீனி போலியா என்கிற ஹல்க் ஹோகன்.
இவரின் இறப்பிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். உலகில் இருக்கும் WWE ஜாம்பவான்கள் அவரின் இறப்பிற்கு மரியாதையும் செலுத்தி வருகிறார்கள்.