குருவி விஜய் ஜம்ப்பையே தவிடுபொடியாக்கிய ஹாலிவுட் நடிகையின் உலகமகா ஜம்ப்!! வீடியோ..
குருவி விஜய் ஜம்ப்
விஜய், திரிஷா, விவேக் நடித்த குருவி படத்தை தயாரித்து தான் உதயநிதி ஸ்டாலின் சினிமாவுக்குள் எண்ட்ரி கொடுத்தார். அப்படத்தில் விஜய் ஜம்ப் அடிக்கும் காட்சிதான் படத்தின் பிளாப்பிற்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது.
சினிமாவில் லிபெர்டி என்ற ஒரு வார்த்தை பல படங்களுக்கு கைக்கொடுக்கும். நம்பவே முடியாத ஸ்டண்ட் காட்சிகளில் தொடங்கி சில லாஜிக் மீறல்களுக்கு அது முட்டுக்கொடுக்கும்.

குருவி படத்திலும் சினிமா லிபர்டியை கொஞ்சம் ஓவராகவே அப்படத்தின் இயக்குநர் தரணி பயன்படுத்தினார். அந்த காலத்திலேயே அது மொரட்டு ட்ரோல் மெட்டீரியலாக மாறியது.
ஹாலிவுட் நடிகையின் உலகமகா ஜம்ப்
ஆனால் அதைவிட ஹாலிவுட் படம் ஒன்றுக்கு அனைத்து ஜம்ப் காட்சிகளுக்கும் இதுதான் டாப் என்பதுபோல் ஒரு ஜம்ப் காட்சி இடம்பெற்று தற்போது குருவி விஜய் எல்லாம் குட்டி புசுக்கா என்பதுபோல் ட்ரோல் மெட்டீரியலாக மாறியிருக்கிறது.
1995 - 2001 ஒளிப்பரப்பான Xena: Warrior Princess என்ற தொடரில் ஹாலிவுட் நடிகை லெஸி லாலெஸ் காட்டுக்குள் ஒரு மரத்திலிருந்து ஜம்ப் அடித்து கடலில் நிற்கும் கப்பலுக்கு சென்று விழும் காட்சி தான் உலகமகா ஜம்ப் என்று ட்ரோலாகியுள்ளது.