SAC விஜய்யின் அப்பாவா? தளபதியால் என் பேர் போச்சு என்று புலம்பும் தந்தை..

vijay sachandrasekar SAC
By Edward Mar 12, 2022 08:30 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக கோடிக்கணக்கில் தன் படத்தால் மார்க்கெட்டை வைத்திருப்பவர் நடிகர் விஜய். நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் அறிமுகமாகிய விஜய், சமீபகாலமாக தந்தை தாயை மதிக்காமல் அவர்களை ஒதுக்கி வருகிறார் என்ற விமர்சனம் சமீபகாலமாக சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

இதை விஜய்யின் அப்பா எஸ் ஏ சந்திரசேகர் பல மேடைகளிலும் பேட்டிகளிலும் விஜய் பற்றிய உண்மையை கூறி வந்தார். இந்நிலையில் தன்னுடைய சினிமா வாழ்க்கை விஜய்யை எப்படி இந்த இடத்திற்கு கொண்டு வந்தேன் போன்ற உண்மைகளை யூடியூப் சேனல் மூலம் தெரிவித்துவருகிறார் விஜய்யின் தந்தை எஸ் ஏ சி.

சமீபத்தில் அவர் வெளியிட்டு ஒரு வீடியோவில், பிளாட் பாரத்தில் இருந்து கொண்டு இங்கிருந்து தான் என் வாழ்க்கை ஆரம்பித்தது. SAC யார்? என்று சின்னபிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை யாரைக்கேட்டாலும் அவர்கள் சொல்வது விஜய்யின் அப்பா, தளபதி அப்பா என்று தான் கூறுவார்கள்.

1992ல் விஜய்யை நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினேன். அப்போது இயக்குனர் SAC-யின் மகன் அறிமுகமாகியுள்ளார் என்று கூறினார்கள். அதன்பின் விஜய்யின் முன்னேற்றம் என் பெயர் மாற ஆரம்பித்தது இளைஞர்கள் மத்தியில்.

தளபதி விஜய்யின் தந்தை என்று அப்படியே முற்றிலுமாக மாறியது. அது எனக்கு பெருமையாக இருக்கிறது என தெரிவித்துள்ளார் SA சந்திரசேகர். விஜய்யால் பல பிள்ளைகள் எனக்கு இருக்கிறார்கள்.