பச்சோந்தி வேஷம் போடும் கேஜிஎஃப் நடிகர் யாஷ்! இதுதான் அவருடைய உண்மையான முகம்..

kgf2 yash
By Edward Apr 20, 2022 06:51 AM GMT
Report

இந்திய சினிமாவை தற்போது வியந்து பார்க்கும் அளவிற்கு பிரம்மாண்ட வசூலை அள்ளி வருகிறது கன்னட படமான கேஜிஎஃப் 2. 2018ல் வெளியான இப்படத்தின் முதல் பாகம் பட்டித்தொட்டியெங்கும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் கடந்த 14 ஆம் தேதி 5 மொழிகளில் கேஜிஎஃப் 2 வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏராளமான வரவேற்பினை பெற்று வருகிறது. படத்தின் பிரமோஷனுக்காக அப்படத்தின் கதாநாயகன் நடிகர் யாஷ் மிகவும் எதார்த்தமாக பேசி வருவது ரசிகர்களை ஈர்த்துள்ளது.

அப்படி தமிழ் பேட்டிகளில் கூட கடினமான கேள்விகளையும் உடைக்கும் அளவிற்கு அவரது பதில்கள் அமைந்தது. அந்தவகையில், இந்த ஜெனரேஷனில் எந்தவொரு வேறுபாடும் இருக்கக்கூடாது என்று பேசிய யாஷ், தமிழ்நாடு கன்னடியன் என்பதை விட்டுவிட்டு அந்த அரசியல் இருக்கக்கூடாது என்றும் கூறியிருந்தார்.

இப்படி எல்லோரும் சமம் என்று பேசி புராணம் பாடிய யாஷ், சமுகவலைத்தள பக்கத்தில் கன்னடம் என்பதில் பெருமைப்படுகிறேன் என்ற வார்த்தையை வைத்துள்ளார்.

இதை பலரும் தேவை என்றால் இந்தியர் என்று அப்படி காரியம் முடிந்ததும் கன்னடியன் என்றும் பெருமை பீற்றிக்கொள்வது சரியா யாஷ் என்று விமர்சனங்களை கூறி வருகிறார்கள் ரசிகர்கள்.

மேலும் தங்களின் பப்ளிசிட்டிக்காக இப்படி நீங்கள் நடிக்காமல் படத்தில் மட்டும் நடியுங்கள் என்று கூறி வருகிறார்கள். இதேபோல் தான் நடிகர் ரஜினிகாந்த், காவிரி பிரச்சனையின் போது கன்னடத்திற்கு எதிராக பேசிவிட்டு, தம் படத்தினை எதிர்க்கும் போது மன்னிப்பும் கேட்டு சர்ச்சையில் சிக்கினார்.

இதை அப்போதே ரசிகர்கள் கிண்டல் செய்து விமர்சனங்களை பதிவிட்டு வருகிறார்கள்.

GalleryGallery