சம்பள விஷயத்தில் அந்த நடிகைக்கே டஃப் கொடுக்கும் நயன் தாரா!! டாக்ஸிக் சேலரி இவ்வளவா..
டாக்ஸிக்
கன்னட சினிமாவில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படமாக இருந்தது தான் கேஜிஎஃப். இப்படத்தின் இரு பாகங்களும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்ததை போன்று வசூலிலும் மிகப்பெரிய வேட்டையை ஆடியது. இதற்கு காரணம் படத்தின் கதாநாயகன் நடிகர் யாஷ் தான்.
இவ்விரு படத்திற்கு பின்பு யாஷின் மார்க்கெட் பெரியளவில் உயர்ந்தது. கேஜிஎஃபி படத்திற்கு பின் டாக்ஸிக் என்ற படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார் யாஷ்.

சமீபத்தில் யாஷின் பிறந்தநாளன்று படத்தின் சிறிய கிளிப்ஸ் வீடியோவை பகிர்ந்தனர். இந்நிலையில் டாக்ஸிக் படத்தில் மொத்தம் 5 கதாநாயகிகள் நடித்துள்ளதாக போஸ்டர்களுடன் அறிவிப்பை வெளியிட்டனர்.
ரூ. 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் டாக்ஸிக் படத்திற்காக யாஷ் ரூ. 50 கோடி சம்பளமாக பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியது.

5 கதாநாயகிகள்
அதேபோல், படத்தின் 5 கதாநாயகிகளான நயன்தாராவுக்கு ரூ. 12 கோடி முதல் ரூ 18 கோடி வரை சம்பளம் கிடைக்கும் என்றும் கியாரா அத்வானிக்கு ரூ.15 கோடி என்றும் ருக்மிணி வசந்திற்கு 3 முதல் 5 கோடி வரை இருக்கும்.
ஹூமா குரேஷி, தாரா சுதாரியாவுக்கு 2 முதல் 3 கோடி வரை சம்பளமாக கொடுப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்தவகையில், டாக்ஸிக் படத்தில் யாஷுக்கு சகோதரி ரோலில் அதுவும் முக்கியமான ரோல் இருப்பதால் நயன் தாராவுக்கு அவ்வளவு சம்பளம் என்றும் கூறப்படுகிறது.