முரட்டு குத்து நடிகையுடன் ரிலேஷன்ஷிப்!! முற்றுப்புள்ளி வைத்த ஷாலினியின் தம்பி..

Ajith Kumar Richard Shalini Yashika Aannand
By Edward Jun 07, 2023 03:30 PM GMT
Report

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை யாஷிகா அனந்த். பிக்பாஸ் 3 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரையும் ஈர்த்தார். அதன்பின் ஒருசில படங்களில் நடித்துள்ள யாஷிகா எஸ் ஜே சூர்யாவின் கடமையை செய் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார்.

இப்படத்தின் ஷூட்டிங்கில் எடுத்த சில புகைப்படங்களை வைத்த இருவருக்கும் காதல் என்று கிசுகிசு எழுந்தது. 2021ல் கார் விபத்தில் சிக்கிய யாஷிகா, 4 மாதங்களாக படுத்த படுக்கையில் சிகிச்சை பெற்று வந்தார். பின் உடல் சீரான பின் தன் கிளாமர் ஆட்டத்தை ஆரம்பித்தார்.

முரட்டு குத்து நடிகையுடன் ரிலேஷன்ஷிப்!! முற்றுப்புள்ளி வைத்த ஷாலினியின் தம்பி.. | Yashika Aannand Dating Ajith Kumars Brother In Law

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா, நடிகை ஷாலினியின் தம்பியும் நடிகருமான ரிச்சர்ட் ரிஷியுடன் நெருக்கமாகவும் அவருக்கு முத்தம் கொடுத்தது போலவும் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வந்தனர். இருவரும் காதலித்து வருவதாக செய்திகள் வெளியான நிலையில், அதற்கு நடிகர் ரிச்சர்ட் ரிஷி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இருவரும் இணைந்து சில நொடிகளில் என்ற படத்தில் நடித்து வருகிறோம். கன்னட இயக்குனர் வினய் பரத்வாஜ் இயக்கும் இப்படத்தில் எடுத்த புகைப்படத்தை தான் நான் பகிர்ந்தேன்.

கதைப்படி நானும் யாஷிகாவும் சுற்றுலா செல்வது, செல்ஃபி எடுப்பது போன்ற காட்சிகளில் புகைப்படம் எடுத்தோம். மற்றபடி எனக்கும் யாஷிகாவுக்கும் காதலும் கிடையாது, கல்யாணமும் கிடையாது என்றும் வெளியூரியில் இருந்ததால் இதுபற்றி உடனே பேச் முடியாமல் போனதாகவும் தெரிவித்துள்ளார் ரிச்சர்ட் ரிஷி.

Gallery