யாஷிகா இப்படியானதுக்கு நான் தான் காரணமா? பிக்பாஸ் பாலாஜி அதிர்ச்சி வீடியோ..

accident biggboss yashika yaashikaanand balajimurugadass
By Edward Aug 03, 2021 04:30 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் வரிசையில் இருப்பவர் பாலாஜி முருகதாஸ். கடந்த 4ஆம் சீசனில் பங்கேற்ற பாலாஜி நடிகை யாஷிகா ஆனந்தின் நெருங்கிய நணபராக இருந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் யாஷிகா ஆனந்த் இரவு பார்ட்டி முடித்துவிட்டு செல்லும் போது கார் விபத்தாகி அவரது தோழி சம்பவ இடத்திலேயே உயிரழந்தார்.

காயமடைந்த யாஷிகா அவரது ஆண் நண்பர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விசாரணை செய்து வருகிறார்கள். இந்நிலையில், புதிதாக மற்றொரு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 6-ஆம் தேதி நள்ளிரவில் ஒரு விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் சாலையோரத்தில் உணவு டெலிவரி செய்யும் இளைஞர் மீது கார் மோதியது.

அந்த விபத்தில் பரத் என்ற இளைஞர் படுகாயம் அடைந்தார். இந்த விபத்தை செய்ததும் யாஷிகா தான் என்று அவர் விபத்து நடந்தவுடன் வேறு காரில் சென்றதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதைப்பற்றி யாஷிகா விட விசாரணை நடத்திய போலீசார் அவர் அதை மறுத்து விட்டார். நான் காரை ஓட்டவில்லை என் நண்பர் வந்த கார் விபத்துக்குள்ளானது என்று செய்தி அறிந்து நான் அங்கு சென்றேன் என்று கூறினார்.

மேலும் இந்த விபத்து சம்பவம் குறித்து மற்றும் ஒரு அதிர்ச்சியான தகவலை ஜோ மைக்கேல் கூறியுள்ளார். காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியது பாலாஜி தான் என்று அவர் கூறியுள்ளார். அந்த சம்பவத்திற்கு பதில் அளிக்கும் விதமாக பாலாஜி ஒரு வீடியோ பதிவில் நான் என்னுடைய KTM பைக் கூட 50 ,60 கிலோமீட்டர் வேகத்தில் தான் ஓட்டுவேன், நான் விபத்தை செய்யவில்லை என்று கூறி வீடியோவை வெளியிட்டுள்ளா பாலாஜி.