அந்த கண்றாவி விஷயத்தை செய்ய சொன்னாங்க! யாஷிகா ஆனந்த்
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் கதநாயகியாக தமிழில் அறிமுகமானவர் நடிகை யாஷிகா. இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரையும் ஈர்த்து வந்தார்.
சில படங்களில் கமிட்டாகி நடித்து வந்த யாஷிகா 5 மாதங்களுக்கு முன் கார் விபத்தால் படுத்த படுக்கையில் இருந்தார். தற்போது அதில் இருந்து மீண்டு வந்த யாஷிகா பழையபடி போட்டோஷூட் என பிஸியாகிவிட்டார்.
இந்நிலையில் தனது சினிமா வாழ்க்கை ஆரம்பத்தில் சில இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் என்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் அந்த மாதிரி நடந்து கொள்ளவும் தூண்டியதாக தெரிவித்து ஷாக் கொடுத்துள்ளார்.
அனைவரை போலவும் இவரும் அந்த இயக்குனர் பெயரை குறிப்பிடவில்லை. கார் விபத்திற்கு முன்பு பிக்பாஸ் இந்தி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருந்ததாகவும் அதன்பின் விபத்து ஏற்பட்டதால் அது நடக்காமல் போனதாகவும் குறிப்பிட்டுள்ளார்.