ஷாலினி தம்பிக்கு முத்தம் கொடுத்து காதலை வெளிப்படுத்திய முரட்டு குத்து நடிகை.. ஷாக்காகும் ரசிகர்கள்..
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை யாஷிகா அனந்த். பிக்பாஸ் 3 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரையும் ஈர்த்தார்.
அதன்பின் ஒருசில படங்களில் நடித்துள்ள யாஷிகா எஸ் ஜே சூர்யாவின் கடமையை செய் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். இப்படத்தின் ஷூட்டிங்கில் எடுத்த சில புகைப்படங்களை வைத்த இருவருக்கும் காதல் என்று கிசுகிசு எழுந்தது.
2021ல் கார் விபத்தில் சிக்கிய யாஷிகா, 4 மாதங்களாக படுத்த படுக்கையில் சிகிச்சை பெற்று வந்தார். பின் உடல் சீரான பின் தன் கிளாமர் ஆட்டத்தை ஆரம்பித்தார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா, நடிகை ஷாலினியின் தம்பியும் நடிகருமான ரிச்சர்ட் ரிஷியுடன் நெருக்கமாகவும் அவருக்கு முத்த கொடுத்துள்ள புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் நடிகை யாஷிகா ஆனந்த். தற்போது இருவரும் காதலித்து வருவதாக அவர்களே வெளிப்படையாக அறிவித்துள்ளனர்.


