பணத்தாசையால் எந்த அளவிற்கும் இறங்க தயார்! நடிகை யாஷிகா ஆனந்த் செய்த செயல்...
பிக்பாஸ் நிகழ்ச்சிகள் மூலம் அறிமுகமாகி சினிமாவில் கொடிக்கட்டி பறப்பவர்களில் ஒருவராக இருப்பவர் நடிகை யாஷிகா ஆனந்த். சென்சேஷனல் நடிகையாக வலம் வரும் யாஷிகா மாடலிங் துறையில் இருந்து கவலை வேண்டாம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகினார்.
இதையடுத்து சில படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்ற யாஷிகா இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் பெரிய இடத்தினை பிடித்தார். தற்போது படங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்தும் கலந்து கொண்டும் வருகிறார்.
இந்நிலையில் பணம் சம்பாதிக்க தற்போது ஆண்ட்ராய்டு ஆப் ஒன்றினை தொடங்கியுள்ளார்.யாஷிகா ஆனந்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அந்த ஆப்பில் விற்று 30 நாட்களுக்கு சந்தாவாக 809 கட்டணம் செலுத்த வேண்டுமாம்.
ஏற்கனவே கிரண் ரத்தோட் மற்றும் ஆபாச பட நடிகை பூனம் பாண்டேவும் இந்த மாதிரியான ஆப்பை துவங்கி வீடியோ, புகைப்படங்களை விற்று வருகிறார்களாம். கிரண் ரத்தோட்டுடன் வீடியோ காலில் பேச கிட்டத்தட்ட 5000 ரூபாய் கட்டணமாக வசூலிக்கிறாராம்.