கார் விபத்தால் இரு மாடல் மரணம்! நடிகை யாஷிகா வெளியிட்ட ஷேக்கிங் புகைப்படம்
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். ஆனால் இதற்கு முன்பே அவர் திரையுலகில் படங்கள் நடிக்க துவங்கிவிட்டார். ஆம் தமிழில் வெளிவந்த துருவங்கள் 16 படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
இதன்பின் வெளிவந்த இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் யாஷிகாவை கொண்டு சேர்த்து. இதற்கு பின் பெரிதும் பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்த வந்தார். மேலும் சில மாதங்களுக்கு முன்பு யாஷிகா ஓட்டி சென்ற கார் விபத்திற்குள்ளாகி, யாஷிகாவின் தோழி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்பேரஷன் எல்லாம் முடிந்து தற்போது கொஞ்சம் கொஞ்சமாக குணமடைந்து வரும் யாஷிகா ஆனந்த், மீண்டும் ஒரு அதிர்ச்சியளிக்கும் செய்தியை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
அதன்படி, மிஸ் கேரளா பட்டம் வென்ற Ansi Kabeer மற்றும் மிஸ் கேரளா ரன்னர் அப் Anjana Shajan இருவரும் கார் விபத்தில் இருந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பதிவு செய்து தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
