அஜித்துடன் நெருக்கமாகிய முரட்டு குத்து பட நடிகை!! ஷாலினி சகோதரரால் ஏற்பட்ட உறவு..
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகியும், இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் கதாநாயகியாகவும் பிரபலமானவர் நடிகை யாஷிகா. கவர்ச்சியில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த யாஷிகா, இடையில் கார் விபத்து ஏற்பட்டு 4 மாதம் படுத்த படுக்கையில் கஷ்டப்பட்டு வந்தார்.
அதிலிருந்து மீண்டு வந்த நடிகை யாஷிகா கிளாமர் புகைப்படங்களையும் பகிர்ந்து அனைவரையும் கவர்ந்து வந்தார். சமீபத்தில் நடிகை அஜித் மனைவி ஷாலினியின் தம்பியும் நடிகருமான ரிச்சர்ட் ரிஷியுடன் சில நொடிகளில் என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளிலும் பேட்டிகளிலும் கலந்து வரும் யாஷிகா பல விசயங்களை பகிர்ந்து வருகிறார். இப்படத்தில் நடித்ததால் ரிச்சர்ட் ரிஷியுடன் நல்ல நட்பு ஏற்பட்டதாகவும் அவர் மூலம் அஜித் சாருக்கும் நெருக்கமாகிவிட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அஜித்துடன், பின்னால் நடந்து போகும், நாயுடன் நடந்து போகும் காட்சியில் கூட நடிக்க ஓகே தான் என்று கூறியிருக்கிறார் யாஷிகா.
இந்த விசயம் ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே யாஷிகா - ரிச்சர்ட் இருவரும் காதலிப்பதாகவும் கிசுகிசு எழுந்த நிலையில் இருவரும் நண்பர் என்றும் பல செய்திகள் வந்தும் அதை பார்த்த நண்பர்களே நம்புகிறார்கள், அப்போது மக்கள் எப்படி நம்பாமல் இருப்பார்கள் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் நடிகை யாஷிகா.