முகேஷ் அம்பானி வீட்டு வேலையாட்கள்!! சம்பளம், தகுதிகள் என்ன தெரியுமா?
முகேஷ் அம்பானி
பிரம்மாண்டத்திற்கு பேர் போன கோடிஸ்வரர்களிலேயே உலகம் வியந்து பார்க்க கூடியவர் தான் முகேஷ் அம்பானி. ரூ. 9280 லட்சம் கோடிக்கு மேல் சொத்து வைத்திருக்கும் அம்பானி, தன்னுடைய பிள்ளைகளின் திருமணத்தை உலகமே அண்ணாந்து பார்க்கும் அளவிற்கு நடத்தி முடிப்பார்.
அம்பானியின் மகன் அனந்த் அம்பானி - ராதிகா திருமணத்திற்கு பின், அவர்கள் பற்றிய சிறு செய்திகள் கூட வைரலாகி வருகிறது. இதனை தொடர்ந்து முகேஷ் அம்பானியின் 27 மாடிகள் கொண்ட அண்டிலியா வீட்டின் மாத கரண்ட் பில் 70 லட்சம் ரூபாய் என்ற தகவலும் பரவியது.
அண்டிலியா வேலையாட்கள்
அம்பானி வீட்டில் பணிப்புரியும் வேலையாட்கள் 600க்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள். முகேஷ் அம்பானியின் தனிப்பட்ட ஓட்டுநராக இருப்பவருக்கு ஒரு மாதத்திற்கு 2 லட்சம் ரூபாய் சம்பளமாக பெற்று ஆண்டுக்கு 24 லட்சம் வருமானமாக கொடுக்கப்படுகிறது. மேலும் முகேஷ் அம்பானியின் செக்யூரிட்டி கார்ட்-கு தகுதி அடிப்படையில் மாத சம்பளம் 15 ஆயிரம் முதல் 55 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.
மேலும் முகேஷ் அம்பானியின் அண்டிலியா வீட்டில் வேலை பெறுவதற்கு ஒருவர், நேர்காணலின் மூலம் தேர்வு செய்யப்படுகிறார். அந்த வேகைக்கு தகுந்த சான்றிதழ் மற்றும் பட்டம் வைத்திருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, செஃப் வேலைக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்றால் சமையல் கலையில் நிபுணத்துவம் பெற்று இருக்கவேண்டும்.
டிஷ்வாஷ் உள்ளிட்ட வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் கூட கடுமையான டெஸ்ட், சரிபார்ப்பு நடவடிக்கைக்கு பிறகே தேர்வு செய்வார்களாம். அண்ட்ரிலியாவில் வேலை செய்பவர்களுக்கு சம்பளத்துடன் கூடுதலாக மருத்துவ காப்பிட்டு உள்ளிட்ட பல வசதிகளை முகேஷ் அம்பானி வழங்கி வருகிறார்.