உலகின் டாப் கோடீஸ்வர யூடியூபர் MrBeast படைத்த புதிய சாதனை கிடைத்த பரிசு..
MrBeast
சமூகவலைத்தளங்கள் மூலம் பலர் தங்கள் திறமைகளை காட்டி பிரபலமாகுவதை போல் அதன்மூலம் அதிகம் சம்பாதித்தும் வருகிறார்கள். அப்படி யூடியூப் வீடியோவை பகிர்ந்து டாப் கோடீஸ்வரர் என்ற பெயரை பெற்று பல கோடி சொத்துக்களை சேர்த்துள்ளவர் தான் மிஸ்டர் பீஸ்ட்.
Jimmy Donaldson என்பவர் MrBeast என்ற யூடியூப் சேனலை ஆரம்பித்து சுமார் 400 மில்லியன் சப்ஸ்கிரைபரை சமீபத்தில் பெற்றிருக்கிறார்.
யூடியூப் மூலம் இந்திய மதிப்பில் சுமார் 8500 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து மதிப்பை வைத்துள்ளாராம். வரலாற்றில் முதல் முறையாக யூடியூப்பில் 400 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை கடந்த சாதனையை மிஸ்டர் பீஸ்ட் பெற்றுள்ளார்.
400 மில்லியன்
இந்நிலையில் யூடியூப் தலைமை நிர்வாக அதிகாரி நீல் மோகன், மிஸ்டர் பீஸ்ட்-ஐ நேரில் சந்தித்து வாழ்த்தியுள்ளார். முன்னதாக 1 மில்லியன் சப்ஸ்கிரைபர்களுக்கு கோல்ட் ப்ளே பட்டன் வழங்கப்பட்டது. 100 மில்லியன் சப்கிரைபர்களுக்கு ரெட் டைமண்ட் ப்ளே பட்டன் கொடுக்கப்பட்டது.
தற்போது, யாரும் அடையாத 400 மில்லியன் (40 கோடி) சப்ஸ்கிரைபர்களை பெற்றதால் MrBeastக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய டிராபி வழங்கியுள்ளார் யூடியூப் தலைமை நிர்வாக அதிகாரி நீல் மோகன்.
வெள்ளிநிறத்தில், தூய நீல க்ரிஸ்டல்களில் செய்யப்பட்ட யூடியூப் ப்ளே பட்டன் சின்னத்துடன், நியூ டிசைன் மற்றும் யூடியூப் அடையாளத்துடன் அந்த டிராபி இருந்துள்ளது.