ஆண்ட்ரியாவை பாத்து பயந்தேன்! ஆனா அப்படி செய்யவில்லை.. ஷாக் கொடுத்த யூடியூப் நடிகர்.
தமிழ் சினிமாவில் மதுபான கடை என்ற படத்தினை இயக்கி அறிமுகமாகியவர் இயக்குனர் கமல்க்கண்ணன். 2012ல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து சிபிராஜ், ஆண்ட்ரியா, அதுல்யா ரவி, மஞ்சிமா மோகன், சமுத்திரக்கனி உள்ளிட்ட நட்சத்திரங்களை வைத்து வட்டம் என்ற படத்தினை இயக்கியுள்ளார்.
சமீபத்தில் இப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படத்தில் நக்கலைட்ஸ் யூடியூப் சேனலில் முக்கிய கதாபாத்திரத்தில் அசட்டுத்தனமான சேட்டைகளுடன் நடித்து பிரபலமானவர் சசி. இப்படத்தில் நடிகராக அறிமுகமாகி நெகடிவ் ரோலில் நடித்துள்ளார்.
இப்படம் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், முதல் படத்திலேயே சிபிராஜ், ஆண்ட்ரியா உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்களுடன் நடித்தது நல்ல அனுபவத்தை கொடுத்தது. முதலில் ஆண்ட்ரியாவுடன் நடிக்கும் போது அவர் ரொம்ப ஆட்டிடியூட் காட்டுவார் என்று பயந்து போனேன்.
ஆனால் அவர் அப்படி எதுவும் செய்யவில்லை. தோழமையுடன் தான் என்னை அணுகினார் என்று கூறியுள்ளார். ஏற்கனவே பலர் ஆண்ட்ரியாவின் ஆட்டிடியூட் பற்றி இப்படி கூறியும் இருக்கிறார்கள்.