ரூ. 80 ஆயிரம் விஐபி டிக்கெட் வேஸ்ட்!! சிம்பொனியால் ஏமாந்துபோன யுவன் ரசிகைகள் புலம்பல்

Yuvan Shankar Raja Chennai
By Jai Sep 20, 2026 01:30 PM GMT
Report

யுவன் சங்கர் ராஜா

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் சமீபத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் Walking Through The Rainbow - A Symphonic Experience என்ற பிரத்யேக கான்செர்ட் நடந்தது.

ரூ. 80 ஆயிரம் விஐபி டிக்கெட் வேஸ்ட்!! சிம்பொனியால் ஏமாந்துபோன யுவன் ரசிகைகள் புலம்பல் | Yuvan Symphony Concert Fans Critics Controversy

யுவனின் ஐகானிக் பாடல்கள் எல்லாம் இடம்பெறும் என்று நினைத்து டிக்கெட் புக் செய்து ரசிகர்கள் சென்றுள்ளனர். ஆனால் பாட்டு பாடாமல் சிம்பொனி மட்டும் இசைக்கப்பட்டுள்ளது.

இதனால் அதிருப்தி அடைந்த பெண்கள், யுவன் பாடுவார் என்று எதிர்பார்த்து வந்தோம், அவர் ஒன்று இரண்டு பாடலாவது பாடி இருக்கலாம். இசையை கேட்க கேட்க எல்லாம் ஒரேமாதிரி மியூசிக் மாதிரிதான் எங்களுக்கு தெரிந்தது. விஐபி டிக்கெட் 80 ஆயிரம் எடுத்து வந்தோம்.

ரூ. 80 ஆயிரம் விஐபி டிக்கெட் வேஸ்ட்!! சிம்பொனியால் ஏமாந்துபோன யுவன் ரசிகைகள் புலம்பல் | Yuvan Symphony Concert Fans Critics Controversy

இவ்வளவு பெரிய ஏமாற்றமாகிவிட்டது, ஆனால் யுவனை பார்த்த திருப்தியில் கிளம்புகிறோம் என்று ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளனர் இதற்கு சிலர், சிலர் சிம்பொனியை தவறாக புரிந்து கொண்டு வந்துவிட்டார்கள், அதைக் கேட்கும்போது நன்றாக இருந்தது. யுவனின் கேரியரில் ஹைலைட்டான விஷயத்தை அப்படியே சிம்பொனியா கொடுத்து இருந்தார் என்றும் கூறி வருகிறார்கள்.