4 வருட திருமண வாழ்க்கை!! மனைவியை விவாகரத்து செய்யும் யுவேந்திர சாஹல்..
யுவேந்திர சாஹல்
இந்தியாவில் கடந்த ஆண்டு முதல் பல விவாகரத்து செய்திகள் அதிகரித்து வரும் நிலையில் இந்த ஆண்டும் இது தொடர்கிறது. கடந்த ஆண்டு ஹார்திக் பாண்டியா தனது மனைவியை பிரிவதாக அறிவித்தார். மேலும் ஒரு கிரிக்கெட் வீரர் தன்னுடைய மனைவியை திருமணம் செய்த 4 ஆண்டுகளில் பிரியவுள்ளாராம்.
அது யாரும் இல்லை இந்திய கிரிக்கெட் அணியின் சுழல்பந்துவீரர் யுவேந்திர சாஹல் தானாம். கடந்த 2020 டிசம்பர் 22 ஆம் தேதி யூடியூபர், நடன இயக்குநர் மற்றும் பல் மருத்துவரான தன்ஸ்ரீ வர்மாவை யுவேந்திர சாஹல் திருமணம் செய்து கொண்டார்.
இணையத்தில் ஆக்டிவாக இருந்து பல பதிவுகளை பகிர்ந்து வந்த தன் மனைவியை 4 ஆண்டுகளுக்கு பின் இன்ஸ்டாகிராமில் இருந்து அன்ஃபாலோ செய்துள்ளார் யுவேந்திர சாஹல்.
விவாகரத்து
இந்நிலையில், யுவேந்திர சாஹல் தன் மனைவி தனஸ்ரீ வர்மாவை சட்ட ரீதியாக பிரிய நீதிமன்றத்தில் ஆஜராகினர். சட்டரீதியான நடைமுறைகள் அனைத்தும் முடிந்த நிலையில் இருவருக்கும் விவாகரத்து வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இருவருக்கும் இடையே இணக்கம் இல்லாததால் 18 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் பரஸ்பர சம்மத்துடன் விவாகரத்து பெற்று பிரிந்தார்கள் சாஹல் - தனஸ்ரீ. மேலும் முன்னாள் மனைவி தன்ஸ்ரீக்கு ஜீவனாவம்சமாக 60 கோடி ரூபாய் தரவுள்ளதாகவும் செய்திகள் பரவி வருகிறது.