விக்ரம் பட நடிகையுடன் 8 வருட தொடர்பு!! வேறொரு நடிகை திருமணம் செய்த ஜாகீர் கான்..
சினிமாவில் நடிக்கும் நடிகைகள் மீது தொழிலதிபர்கள் முதல் விளையாட்டு வீரர்கள் வரை காதலில் இருப்பது வழக்கம். அதில் ஒருசிலர் மட்டுமே காதலித்த நடிகைகளை கரம்பிடிக்கிறார்கள்.
அப்படி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான், நடிகை ஒருவருடன் 8 ஆண்டுகள் காதலில் இருந்துள்ளார்.
சியான் விக்ரம் நடிப்பில் வெளியான டேவிட் படத்தில் வாய் பேச வராத கதாநாயகியாக நடித்த இஷா ஷ்ர்வானியுடன் 8 ஆண்டு காதலில் இருந்திருக்கிறார்.
2005ல் நிகழ்ச்சி ஒன்றில் இஷா ஷர்வானியை சந்தித்த ஜாகீர் கான், பின் நாளடைவில் நட்பாக இருந்து காதலியாக மாற்றி ஊர் சுற்றியிருக்கிறார்.
இருவரும் பார்ட்டியில் இணைந்து பங்கேற்று நட்சத்திர ஜோடியாகவே உலா வந்துள்ளனர். 2011ல் இருவரும் திருமணம் செய்து கொள்வதாக கூறப்பட்ட நிலையில் சில காரணங்களால் காதலை முறித்துக்கொண்டனர்.
ஆனால் என்ன காரணம் என்று இதுவரை இருவரும் கூறவில்லை. அதன்பின் சக் தே இந்தியா படத்தின் கதாநாயகி சாகரிகா கட்கேவை டேட்டிங் சென்று பின் 2017ல் ஜாகீர் கான் திருமணம் செய்தார்.
சாகரிகா, ஹாக்கி வீராங்கனையாக நடித்த சக் தே இந்தியா படத்தில் ஒருவரை காதலிப்பதாக காட்சிகள் கூட அமைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.