சிவாவிடம் காதலை சொன்ன அயலி.. விபத்தால் உயிருக்கு வந்த ஆபத்து - அயலி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அயலி. நேற்றைய எபிசோடில் சிவா வர்மாவின் பிடியிலிருந்து தப்பி வந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, சிவா கோவிலுக்கு வர அயலி அவனை பார்த்ததும் நிம்மதி அடைகிறாள். மேலும் வர்மா கஸ்தடியில் சிக்கி இருக்கும் ஜானை எப்படியாவது மீட்க வேண்டும். பைரவியை பறிகொடுத்த மாதிரி ஜானை இழந்துட கூடாது என முடிவெடுக்கின்றனர்.
மேலும் அயலி ஜானை காப்பாற்ற நான் செல்கிறேன் என முடிவெடுக்கிறாள். போகும்போது சிவாவை கட்டிப்பிடித்து முதல்முறையாக ஐ லவ் யூ என காதலை சொல்ல சிவா சந்தோஷமடைகிறான். இங்கு கபிலனுக்கு ராணுவ தளவாடங்கள் சென்னை வழியாக செல்லாமல் சேலம் வழியாக செல்வதாக தகவல் கிடைக்கிறது.

மேலும் அயலி வர்மா இருக்கும் இடத்திற்கு ஆட்டோவில் வர அப்போது ஏற்படும் விபத்தில் தூக்கி வீசப்படுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அயலி சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.