டான்ஸ் ஜோடி டானஸ் நிகழ்ச்சியால் ஜீ தமிழ் டிவிக்கு வந்த சோதனை!! இதுதான் காரணம்..

Zee Tamil Dance Jodi Dance
By Edward Jul 14, 2025 10:30 AM GMT
Report

டான்ஸ் ஜோடி டான்ஸ் Reloaded 3

ஜீ தமிழில் ஒளிப்பரபாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் Reloaded 3 நிகழ்ச்சியில் தொகுப்பாளராக மணிமேகலை மற்றும் மிர்ச்சி விஜய் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார்கள். கடந்த வாரம் நடந்த எபிசோட்டில் தில்லை - ப்ரீத்தா, நிதின் - தித்யா, சபரிஷ் - ஜனுஷிகா, பிரஜ்னா - ககனா, திலீப் - மெர்சீனா போன்ற 5 ஜோடிகள் இறுதி போட்டிக்கு தேர்வாகினர்.

டான்ஸ் ஜோடி டானஸ் நிகழ்ச்சியால் ஜீ தமிழ் டிவிக்கு வந்த சோதனை!! இதுதான் காரணம்.. | Zee Tamil Receives Notice For Offending Hindu

தற்போது, டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி மூலம் ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு ஒரு சிக்கல் வந்துள்ளது. அதாவது கடந்த வாரம் நடந்த நிகழ்ச்சியில் டான்ஸ் ஜோடிகள் நடனமாடிக்கொண்டிருந்தபோது, துணை நடிகர்கள் சிவன், முருகன், விநாயகர் உள்ளிட்ட வேடங்களை அணிந்து நடனமாடினர்.

அப்போது நடனமாடிய ஜோடி ஆபாசமாக நடந்து கொண்டதாகவும், அவர்களுக்கு அருகில் கடவுள் வேடத்தில் இருந்தவர்களை நடனமாடவிட்டு இந்து மக்களின் நம்பிக்கைகளை புண்படுத்தியதாக இந்து முன்னணி ட்விட்டர் பக்கத்தில் புகாரளித்திருந்தது.

டான்ஸ் ஜோடி டானஸ் நிகழ்ச்சியால் ஜீ தமிழ் டிவிக்கு வந்த சோதனை!! இதுதான் காரணம்.. | Zee Tamil Receives Notice For Offending Hindu

நோட்டீஸ்

இந்நிலையில் இதுதொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஜீ தமிழ் தொலைக்காட்சி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. மத்திய ஒளிப்பரப்புத் துறை அமைச்சகம் இந்த நோட்டீசை ஜீ தமிழ் டிவிக்கு அனுப்பியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து ஏழு நாட்களில் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் விளக்கம் அளிக்கவில்லை என்றால் இதுதொடர்பாக கேபிள் டிவி சட்டம் 1995ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளதாம்.