அயலி சீரியல் எபிசோட் அப்டேட்: மனம் மாறிய ரித்திகா... உயிருக்குப் போராடும் அயலியிடம் கண்ணீருடன் மன்னிப்பு கேட்ட உருக்கமான தருணம்!

Serials Zee Tamil Tamil TV Serials
By Jai Nov 05, 2026 05:27 AM GMT
Report

அயலி சீரியல்

Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘அயலி’ தொடரில் அடுத்தடுத்து பல அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அயலியைப் பார்க்க ரித்திகா பதறியடித்துக் கொண்டு ஓடி வருகிறார். அயலி விரைவில் குணமாக வேண்டும் என்று தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு வெளியே நின்று சாமியிடம் கண்ணீருடன் வேண்டிக்கொள்கிறார். இதைப் பார்த்த அம்மாவும் சித்தியும், “என்னடி இது... திடீர்னு அயலி மேல இவ்வளவு பாசம் வந்துடுச்சு?” என்று ஆச்சரியமாகக் கேட்கின்றனர்.

அயலி சீரியல் எபிசோட் அப்டேட்: மனம் மாறிய ரித்திகா... உயிருக்குப் போராடும் அயலியிடம் கண்ணீருடன் மன்னிப்பு கேட்ட உருக்கமான தருணம்! | Zeetamil Ayali Epi 447 Preview Nov 05 2026

அதற்கு ரித்திகா, “இத்தனை நாளா நான்தான் அயலியைத் தப்பா புரிஞ்சுக்கிட்டேன். அவ எப்பவுமே எனக்கு நல்லதுதான் நினைச்சிருக்கா. எனக்கு ஆதரவாகவும் இருந்திருக்கா. ஆனா, நான்தான் அவளைப் புரிஞ்சுக்காம தப்பா நடந்துக்கிட்டேன்” என்று சொல்லி வருத்தப்படுகிறார். அதன்பிறகு கபிலனை அழைக்கும் ரித்திகா, இதுவரைக்கும் அவரிடம் சொன்ன பொய்கள் பற்றிய உண்மையைச் சொல்ல முயற்சி செய்கிறார்.

அப்போது, ஒரு நண்பர் வியாபாரத்தில் சிக்கிக்கொண்டதால்தான் இத்தனை பிரச்சனைகளும் உருவானது என்ற உண்மையும் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவருகிறது. இதற்கிடையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அயலி கண் விழிக்கிறார். இதைக் கேட்டதும் சந்தோஷத்தில் ஓடிவரும் ரித்திகா, “அக்கா... என்னை மன்னிச்சிடுங்கக்கா. நான் உங்களை ரொம்பத் தப்பா புரிஞ்சுக்கிட்டேன்.

அயலி சீரியல் எபிசோட் அப்டேட்: மனம் மாறிய ரித்திகா... உயிருக்குப் போராடும் அயலியிடம் கண்ணீருடன் மன்னிப்பு கேட்ட உருக்கமான தருணம்! | Zeetamil Ayali Epi 447 Preview Nov 05 2026

சாரி அக்கா” என்று கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்கிறார். ஆனால், அயலியோ எந்தக் கோபமும் இல்லாமல், “அதெல்லாம் ஒண்ணுமில்ல. சாரி எல்லாம் கேட்க வேண்டாம். எல்லாம் சரியாயிடும், பார்த்துக்கலாம்” என்று ரித்திகைக்கு ஆறுதல் சொல்கிறார். இத்தனை நாளாக அயலியைத் தவறாகப் புரிந்துகொண்ட ரித்திகா, இப்போது தன்னுடைய தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்பது ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது. இனி இருவருக்கும் இடையிலான உறவு எப்படி மாறப்போகிறது? அடுத்ததாக என்ன நடக்கப்போகிறது? என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.