அயலி சீரியல் எபிசோட் அப்டேட்: கபிலன் மீது இந்திராணிக்கு வந்த சந்தேகம்... என்கவுண்டருக்குத் தயாராகும் சிவா!
Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘அயலி’ சீரியலில், அடுத்தடுத்து நடக்கும் அதிரடி திருப்பங்களால் கதை விறுவிறுப்பாகப் போய்க்கொண்டிருக்கிறது.

இந்திராணியிடம் சிக்கிக்கொண்ட அயலி... கபிலனைக் காப்பாற்றச் செய்த சத்தியம்!
அயலியைத் தனியாக அழைத்துப் பேசும் இந்திராணி, கபிலன் பற்றித் தனக்கு வந்த சந்தேகத்தைச் சொல்கிறார். “கபிலனைச் சின்ன வயசுல இருந்தே நான்தான் வளர்த்தேன். ஒருமுறை ஸ்கூல்ல பேரண்ட்ஸ் மீட்டிங் நடந்தப்போ, நீதான் எனக்கு முதல் அம்மான்னு சொல்லி என்னைத்தான் கூட்டிட்டுப் போனான். அப்படிப்பட்டவன் இப்போ என்கிட்ட முதல் முறையா பொய் சொல்லியிருக்கான். அவன் ஏதோ பெரிய பிரச்சினையில மாட்டியிருக்கான்னு என் மனசுக்குத் தோணுது” என்று கூறுகிறார்.
மேலும், “இந்த விஷயம் சிவாவுக்குத் தெரியவே கூடாது. வீட்டுல இருக்கிற யாருக்கும் தெரியாம நீதான் அவனைக் காப்பாத்தணும்” என்று அயலியிடம் கேட்கிறார். அதோடு, தன் மீது சத்தியம் செய்யச் சொல்லி அயலியைக் கட்டாயப்படுத்துகிறார். வீட்டில் இருப்பவர்களுக்குத் தெரிந்தால் எல்லோரும் மன உளைச்சலுக்கு ஆளாவார்கள் என்று நினைக்கும் அயலியும் வேறு வழியில்லாமல் சத்தியம் செய்து கொடுக்கிறார்.

அம்பத்தூர் காவல் நிலையத்தில் நடந்த பயங்கரம்!
இப்படி இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போதே விஜயகுமாரிடமிருந்து அயலிக்கு அவசர அழைப்பு வருகிறது. உடனே அம்பத்தூர் காவல் நிலையத்துக்கு வரச் சொல்ல, பிரின்சிபால் அழைப்பதாக வீட்டில் பொய் சொல்லிவிட்டு அவசர அவசரமாகக் கிளம்புகிறார்.
அங்கே போய்ப் பார்த்தால், காவல் நிலையமே போர்க்களம் மாதிரி இருக்கிறது. காவலர்கள் பலரும் துப்பாக்கியால் சுடப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடக்கிறார்கள். அவர்களுக்கு உடனடியாகத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைப் பார்த்த இந்திராணி அதிர்ச்சியில் உறைந்து போகிறார்.

சிசிடிவி காட்சியில் சிக்கிய கபிலன்... உண்மை தெரிந்து அதிர்ந்த போலீஸ்!
காவல் நிலையத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பதைக் கண்டுபிடிக்க, போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்கிறார்கள். அப்போதுதான் கபிலன் போதையில் காவலர்களிடம் தகராறு செய்தது தெரிய வருகிறது.
அப்போது, “உங்களுக்கு எவ்வளவு லஞ்சம் வேணும்னாலும் தர்றேன். எங்க அக்கா யாருன்னு தெரியுமா? நாங்க அந்த ஆயுத வண்டியைத் தூக்கிட்டா உலகத்துலயே பெரிய பணக்காரங்களாகிடுவோம்” என்று கபிலன் உளறிக்கொண்டிருக்கிறான்.
அந்த நேரத்தில் திடீரென உள்ளே நுழையும் வர்மாவும் அவனுடைய ஆட்களும், அங்கிருந்த காவலர்களைச் சரமாரியாகச் சுட்டுவிட்டு, கபிலனை அங்கிருந்து கடத்திச் செல்கிறார்கள். இதைப் பார்த்து போலீசார் அதிர்ச்சியடைகிறார்கள்.

கபிலனை என்கவுண்டர் செய்ய முடிவெடுக்கும் சிவா... தவிக்கும் அயலி!
காவல் நிலையத்தில் நடந்த இந்தச் சம்பவத்தைக் கேள்விப்பட்ட சிவா கடும் கோபமடைகிறான். பல போலீசாரைத் துப்பாக்கியால் சுட்ட கபிலனை என்கவுண்டர் செய்தே தீருவேன் என்று உறுதியாகச் சொல்கிறான். இதைக் கேட்டு அதிர்ச்சியடையும் அயலி, “அவன் உங்க அக்கா பையன். நீங்க இப்படிச் செஞ்சா அக்கா என்ன நினைப்பாங்க?” என்று சொல்லி சிவாவைத் தடுக்க முயற்சி செய்கிறார்.
ஆனால் சிவாவோ, “அக்காவா இருந்தாலும் சரி, பிள்ளையா இருந்தாலும் சரி... அவன் ஒரு குற்றவாளி. அவனுக்குத் தண்டனை கொடுக்கிறதை என் அக்காவே தப்பா நினைக்க மாட்டாங்க” என்று ஆவேசமாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறான். ஒருபக்கம் கபிலனைக் காப்பாற்றுவதாக இந்திராணிக்குச் செய்து கொடுத்த சத்தியம்... இன்னொரு பக்கம் குற்றவாளியான கபிலனை என்கவுண்டர் செய்யத் துடிக்கும் கணவன் சிவா! இவர்கள் இருவருக்கும் நடுவில் சிக்கிக்கொண்டு, என்ன செய்வதென்றே தெரியாமல் அயலி தவிக்கிறார்.
அயலி, இந்திராணிக்குச் செய்து கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றுவாரா? இல்லை, சிவாவின் முடிவுக்கு வழிவிடுவாரா? கபிலனின் நிலைமை என்னவாகும்? என்பதை அறிய அயலி சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.