TRP ரேஸில் சன் டிவிக்கு தண்ணிக்காட்டிய விஜய் டிவி சீரியல்கள்!! யார் டாப் தெரியுமா..

Serials Tamil TV Serials Pandian Stores Ethirneechal Singappenne
By Edward Jun 20, 2025 05:07 AM GMT
Report

தமிழ் சீரியல்கள்

திரைப்படங்களை மக்கள் மத்தியில் சின்னத்திரையில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களும் ரியாலிட்டி ஷோக்களும் மிகப்பெரிய ஆதரவை பெறும்.

இதில் வீட்டில் இருக்கும் பெரும்பாலானோர் சீரியல்களை பார்க்க அடிமையாகிவிடுவார்கள் சினிமாவின் வெற்றி - தோல்விகளை தீர்மானிக்க பாக்ஸ் ஆபிஸ் எப்படி இருக்கிறதோ அதோபோல் சின்னத்திரை சீரியல்கள் தோல்வி - வெற்றியை பார்க்க டிஆர்பி ரேட்டிங் மிகமுக்கிய பங்கினை பெற்று அதை தீர்மானிக்கிறது.

TRP ரேஸில் சன் டிவிக்கு தண்ணிக்காட்டிய விஜய் டிவி சீரியல்கள்!! யார் டாப் தெரியுமா.. | 10 Tamil Serial Trp Rating 23Rd Week Singapenne

அந்தவகையில் ஒவ்வொரு வாரமும் சின்னத்திரை சீரியல்களின் டிஆர்பி லிஸ்ட் வெளியாகும். 2025 ஆம் ஆண்டின் 23வது வாரமான கடந்த வார நிலவரப்படி, எந்த சீரியல் டாப்பில் இருக்கிறது என்ற லிஸ்ட் தற்போது வெளியாகியுள்ளது. சமீபகாலமாக சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் சீரியல்கள் தான் டாப் முதல் இடத்தினை பெற்று வந்தது. தற்போது சன் டிவி சீரியல்களுக்கு விஜய் டிவி சீரியல்கள் டஃப் கொடுத்துள்ளது.

டாப்10 TRP

அதில், விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் சிங்கப்பெண்ணே சீரியல் 9.36 டிஆர்பி ரேட்டிங் பெற்று முதல் இடத்தினை பிடித்துள்ளது.

அதனை தொடர்ந்து, சன் டிவியின் மூன்று முடிச்சு சீரியல் 9.00 டிஆர்பி டேட்டிங் பெற்றும் இரண்டாம் இடமும், கயல் சீரியல் 8.32 புள்ளியில் 3வது இடமும் பெற்றிருக்கிறது.

TRP ரேஸில் சன் டிவிக்கு தண்ணிக்காட்டிய விஜய் டிவி சீரியல்கள்!! யார் டாப் தெரியுமா.. | 10 Tamil Serial Trp Rating 23Rd Week Singapenne

4வது இடத்தில் 7.47 புள்ளிகளுடன் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலும், 7.32 புள்ளிகளுடன் சன் டிவியின் மருமகள் சீரியல் 5வது இடமும், 7.11 புள்ளிகளுடன் விஜய் டிவியின் அய்யனார் துணை சீரியலும் பிடித்திருக்கிறது.

இதனை தொடர்ந்து, சன் டிவியின் அன்னம் சீரியல் 6.97 டிஆர்பி ரேட்டிங்கோடு 7வது இடத்திலும், எதிர்நீச்சல் சீரியல் 6.96 புள்ளிகலுடன் 8வது இடத்திலும், விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் 6.98 புள்ளியுடன் 9வது இடத்திலும் சன் டிவியின் கார்த்திகை தீபம் 5.83 புள்ளிகளுடன் 10வது இடத்தினை பிடித்திருக்கிறது.

TRP ரேஸில் சன் டிவிக்கு தண்ணிக்காட்டிய விஜய் டிவி சீரியல்கள்!! யார் டாப் தெரியுமா.. | 10 Tamil Serial Trp Rating 23Rd Week Singapenne

கடந்த வாரத்தை விட கார்த்திகை தீபம் 6.13 டிஆர்பி ரேட்டிங் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.