நான் மகன் அல்ல பட வில்லன்கள்..வடபழனி சிக்னலில் சுற்றியவரை தூக்கிய இயக்குநர் சுசீந்திரன்..
நான் மகான் அல்ல
2009ல் வெளியான வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் இயக்குநர் பயணத்தை ஆரம்பித்தவர் தான் இயக்குநர் சுசீந்திரன். முதல் படமே மிகப்பெரிய வெற்றியை பெற்றதை அடுத்து அடுத்த ஆண்டே 2010ல் அவர் இயக்கத்தில் 'நான் மகான் அல்ல' படல் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இப்படத்தில் கார்த்தி, காஜல் அகர்வால், சூரி, அருள்தாஸ், லட்சுமி ராமகிருஷ்ணன் என்ற பல நட்சத்திரங்கள் நடித்து வெளியானது. உணர்வுப்பூர்வமான நிகழ்வுகள் அனைத்தும் இப்படத்தில் வைத்த இயக்குநர் சுசீந்திரன், வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த 4 இளைஞர்களை எப்படி படத்தில் தேர்வு செய்தது பற்றி பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார்.
வில்லன்கள்
அதில், வினோத் என்பவரை நந்தா படத்தில் சிறுவனாக நடித்ததால் அவனை நடிக்க வைத்தேன். இன்னொருவன் மகேந்திரன், விஜய் மில்டனுடன் அசிஸ்டண்ட் வேலை செய்தபோது, நான் இயக்கிய தீபாவளி படத்தில் அசிஸ்டண்ட் கேமராமேனாக வேலை செய்தான்.
அன்பு என்ற பையன் என்னுடைய கோ டைரக்டர் லெனினின் ஏரியாவில் இருந்தவன். இன்னொரு பையன் வடபழனி சிக்னலில் ஒருமாதிரி பார்த்துட்டு இருந்தான், எனக்கு பிடித்ததால் அவனை பிடிடா என்று அவனை பிடித்து நடிக்க வைத்தேன். 4 பேரும் சின்சியராக இருந்தார்கள் என்று சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.