ஆம்பளயாக மாறிய சரத்குமார் மகள் வரலட்சுமி!! என்ன பண்றாரு பாருங்க!
வரலட்சுமி சரத்குமார்
சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். அதன்பின் தாரை தப்பட்டை, சர்கார், விக்ரம் வேதா, சத்யா, சண்டக்கோழி 2 என தொடர்ந்து தமிழில் நடித்தவர் தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்து வருகிறார். கடைசியாக இவரது நடிப்பில் 12 வருடங்களுக்கு முன் உருவான மதகஜராஜா படம் ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸில் சக்கைபோடு போட்டது. இப்போது வரலட்சுமி, விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

பிஸியாக நடித்துக் கொண்டிருந்தவர் மும்பையை சேர்ந்து நிக்கோலஸ் சச்தேவ் என்பவரை காதலித்து பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் 3 நிகழ்ச்சியில் நடுவராகவும் வலம் வந்தார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வரும் வரலட்சுமி, வித்தியாசமான ஒரு ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். அதாவது கோவையில் 3 பேர், மாணவி ஒருவரை தூக்கிச்சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நாட்டையை உலுக்கியது.
ஆம்பளயாக மாறி
அதை கண்டிக்கும் விதமாக காமெடியாக அந்த ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோவில், ஒரு நாளைக்கு ரோல் ரிவர்சஸ்.. பெண்கள் ஆண்களைப் போல நடந்து கொண்டால் எப்படி இருக்கும்.. ஒரு யோசனை..
ஆண் நடந்து செல்லும் போது, சரியான நாட்டுகட்டடா என்றும், ஆண்கள் குனியும் போது இந்த இடத்தை பார்த்து ரசிப்பதும், ஆண் பின்னாடியே நடந்து சென்று சேட்டை என ஆண்கள் பெண்களுக்கு என்னென் செய்வார்களே இதை அப்படியே ஆண்போல செய்து வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.
இந்த வீடியோவை பார்த்த நடிகை திரிஷா, சமந்தா சிரித்த இமோஜியை அனுப்பி தங்களின் ரியாக்ஷனை கொடுத்துள்ளனர். இது காமெடியாக இருந்தாலும் பெண்களுக்கு எதிராக ஆண்கள் செய்யும் செயலை கண்டித்து ஒரு விழுப்புணர்வை ஏற்படுத்தியதற்கு நன்றி என்று பலரும் தங்கள் ரியாக்ஷனை பகிர்ந்து வருகிறார்கள்.