முதலமைச்சர் விஜய்யா? திமுக தலைவர் ஸ்டாலினா? தேர்தல் செலவு லிஸ்ட்டில் யார் டாப்..
TVK vs DMK
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடத்தப்பட்டது. தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளில் 233 தொகுதிகளில் நேரடியாகவும் சேலத்தில் மட்டும் சுயேட்சைக்கு ஆதரவளித்தும் போட்டியிட்டது.
தேர்தல் முடிவில் 108 தொகுதிகளில் வென்று கூட்டணி கட்சிகள் ஆதரவோடு விஜய் தலைமையிலான ஆட்சியை பிடித்தது.

தேர்தல் செலவு
இந்நிலையில் ஒவ்வொரு கட்சியும் தேர்தலுக்காக எவ்வளவு செலவு செய்தார்கள் என்ற விவரத்தைன் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளனர். திமுக கட்சி 2026 தமிழக சட்டசபை தேர்தலுக்கு சுமார் ரூ. 197.80 கோடியை செலவு செய்ததாக தெரிவித்துள்ளனர். அதிமுக 112.40 கோடியை செலவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
விஜய்யின் தமிழக வெற்றி கழகம் கட்சியொல் தேர்தல் செலவாக ரூ. 19.40 கோடி செலவு செய்துள்ளதாக கூறியுள்ளனர். ஊடக விளம்பரங்களுக்காக 6 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாம். அச்சு ஊடகங்கள், மின்னணு ஊடகங்கள், வானொலி விளபரங்களுக்கு இப்பணம் செலவிடப்பட்டுள்ளதாம்.
அந்த கணக்கின்படி பார்க்கும்போது தவெக செய்துள்ள தேர்தல் வரவு, செலவு கணக்கின் அடிப்படையில் திமுகவின் செலவில் பத்தில் ஒரு பங்கு மட்டுமே செலவு செய்துள்ளது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.