திருமணமாகி 3 மாசம் கூட ஆகல!! அந்த விசயத்தில் மோதிக்கொள்ளும் அசோக் - கீர்த்தி ஜோடி..

Ashok Selvan Keerthi Pandian
By Edward Nov 29, 2023 06:15 AM GMT
Report

சினிமாவில் பயணிக்கும் நடிகர்கள் நடிகைகள், தங்களுடன் பழகும் சக நட்சத்திரங்கள் மீது ஈர்ப்பு ஏற்பட்டு அவரையே திருமணம் செய்து ரியல் ஜோடிகளாகிவிடுவார்கள். அப்படி தான் சமீபத்தில் நடிகர் அசோக் செல்வன் நீண்டகாலமாக காதலித்து வந்த நடிகை கீர்த்தி பாண்டியனை திருமணம் செய்தார்.

திருமணத்திற்கு முன்பே ப்ளூ ஸ்டார் என்ற படத்தில் இணைந்து நடித்து வந்த அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் செப்டம்பர் 13ல் தமிழ் கலாச்சாரத்தின் படி அவரது சொந்த ஊர் தோட்டத்தில் கல்யாணத்தை முடித்தனர்.

திருமணமாகி 3 மாசம் கூட ஆகல!! அந்த விசயத்தில் மோதிக்கொள்ளும் அசோக் - கீர்த்தி ஜோடி.. | 3 Months Of Marriage Ashok Keerthy Standing Poles

திருமணத்திற்கு பின் நடிப்பாரா கீர்த்தி பாண்டியன் என்ற கேள்வி எழ, குடும்பம் வேற தொழில் வேற என்று கூறி நடிப்பேன் என்று அவரே கூறினார். இந்நிலையில் இருவரும் திருமணத்திற்கு பின் நடிப்பில் மும்முரமாக நடித்து வருகிறார்கள்.

ஜோவிகா வருங்கால திரிஷா, நயன்தாராவா... வனிதாவை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்..

ஜோவிகா வருங்கால திரிஷா, நயன்தாராவா... வனிதாவை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்..

அசோக் செல்வன் நடிப்பில் சபநாயகன் படம் டிசம்பர் 15ல் வெளியாகவுள்ளது. கமலின் உதவியாளராக விஸ்வரூபம் படத்தில் பணியாற்றிய சி எஸ் கார்த்திகேயன் இயக்கியுள்ள இப்படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ள்ளார்.

அதேசமயம், நடிகை கீர்த்தி பாண்டியனும் கண்ணகி என்ற படத்தில் நடித்துள்ளதால் அப்படமும் டிசம்பர் 15ல் திரையரங்குகளில் வெளிவரவிருக்கிறதாம்.

திருமணமாகி 3 மாசம் கூட ஆகல!! அந்த விசயத்தில் மோதிக்கொள்ளும் அசோக் - கீர்த்தி ஜோடி.. | 3 Months Of Marriage Ashok Keerthy Standing Poles

இப்படி, கணவன் - மனைவி நடிப்பில் உருவாகிய படங்கள் ஒரே நாளில் மோதவுள்ளது எந்தளவிற்கு சாத்தியமாக இருக்கப்போவது என்று சினிமா வட்டாரத்தில் பேசிக்கொண்டு வருகிறார்கள். என்னதான் குடும்பம், தொழில் வேறு என்றாலும் இவர்களின் எந்த படம் வெற்றி பெரும் என்ற போட்டி உருவாகத்தான் செய்யுமே என்று கூறி வருகிறார்கள்.