அந்த 30 அடி நீள பாம்பு விசயம் சந்திரமுகி 3 ல தான் இருக்கா!! உண்மையை உடைத்த ராகவா லாரன்ஸ்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் நடன இயக்குனராகவும் திகழ்ந்து வருபவர் மாஸ்டர் ராகவா லாரன்ஸ். சமீபத்தில் ருத்ரன் படத்தில் நடித்து வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இப்படத்தின் பிரமோஷனுக்காக தனியார் இணையதளத்திற்கு பேட்டி கொடுத்து பல விசயங்களை பகிர்ந்து கொண்டார்.
அதில் சந்திரமுகி 2 படத்தை பற்றியும் கூறியிருக்கிறார். சந்திரமுகி 2 வாய்ப்பு எப்படி வந்தது என்ற கேள்விக்கு பதிலளித்த ராகவா லாரன்ஸ், இயக்குனர் பி வாசு சார் படத்தினை அதிகாரப்பூர்வமாக அறிவித்ததை பார்த்துவிட்டு கால் செய்து பாராட்டி வாழ்த்துக்கள் கூறினேன்.
அப்போது சூப்பர் ஸ்டார் தானே பண்றாரு என்று கேட்டதற்கு, சார் பண்ணவில்லை வேறொருவரை தான் பண்ண வைக்கனும்-னு சொன்னாரு. கதை சொல்லி கன்ஃபார்ம் பண்ணியாச்சா சார் என்று வாசு சாரிடம் கேட்டேன். இல்லைன்னு சொன்னதும் என்னிடம் கதை கூறமுடியுமா என்று சும்மா கேட்டதும் உடனே வீட்டிற்கு வந்து கதையை கூறிவிட்டார்.
அப்படி ஆரம்பித்தது தான் சந்திரமுகி 2. மேலும் முதல் பாகத்தில் வரும் பாம்பு காட்சிகள் இரண்டாம் பாகத்திலும் இருக்கிறதா என்று கேள்வி கேட்கப்பட்டது.
பாம்பு ஷாட்ல இருக்கு, ஆனால் பாம்புக்கும் ஷாட்டுக்கும் என்ன சம்பந்தம் இருக்குன்னு வாசு சாரிடம் நானே கேட்டேன். அது சந்திரமுகி 3ல இருக்குன்னு சொல்லிட்டாரு என ராகவா லாரன்ஸ் கூறியிருக்கிறார்.
அப்படியென்றால் சந்திரமுகி 2விற்கு பிறகு சந்திரமுகி 3 படமும் ரெடி பண்ணி இருக்காரா என்று பலர் ஷாக்கிங் ரியாக்ஷன் கொடுத்து வருகிறார்கள்.