அவமானப்படுத்தியவர்களிடம் 14 வருஷமாக தீராத பகை!! லைக்காவை வெளுத்து வாங்கும் அஜித்..
துணிவு படத்திற்கு பின் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடா முயற்சி படம் கூடிய விரைவில் துவங்கவுள்ளது. இதற்கிடையில் இயக்குனர் மாற்றம், ஐடி ரைட், பொருளாத நெருக்கடி, கதையில் குளறுபடி என்று லைக்கா பல விசயங்களில் அடிவாங்கி வருகிறது.
இந்த விசயத்திற்காகவே பெரும் புள்ளியிடம் லைக்கா நிறுவனம் நாடியுள்ளது. ஏற்கனவே அந்த பெரும் புள்ளியிடம் 14 வருடங்களுக்கு முன் ஏற்பட்ட பிரச்சனையால் இன்றுவரை ஏகே ஒதுக்கி வைத்து வருகிறார். ஆனால், தன்னை அவமானப்படுத்திவர்களிடமே அடைக்கலம் போகுவதால் லைக்கா நிறுவனத்தை அஜித் வெளுத்து வாங்கியிருக்கிறாராம்.
அஜித்தின் இதற்கு முன் வெளியான படத்திற்கு மறைமுகமாக உதவிய அந்த பெரும்புள்ளி, இப்படத்தில் வெளிப்படையாக உத வி செய்வது அஜித் கண்டறிந்துள்ளார். அவமானம் சம்பந்தப்பட்ட விசயமாக அதை அஜித் பார்த்து வருகிறார்.
அந்த பெரும் புள்ளி வேறு யாரும் இல்லை, அன்பு செழியன் தானாம். நான் கடவுள் படத்தில் அஜித் நடிக்கவிருந்த போது பாலாவுக்கு இடையில் அஜித்க்கு பிரச்சனை ஏற்பட்டது. அந்த பிரச்சனையில் பாலா, அன்பு செழியன் மூலம் அஜித்திடம் பஞ்சாயத்து வைத்தார்.
அதனால் தான் அன்பு செழியன் மீது தீராத பகையாக வைத்துள்ளார் அஜித். தன்னை அவமானப்படுத்தியவர்களிடம் உதவி கேட்டதால் லைக்கா நிறுவனத்திற்கு கடைசி கடையாக ஒருமுறை வார்னிங் கொடுத்துள்ளார் அஜித் என்று கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது.
