40 வயது நடிகைக்காக போட்டிபோடும் விஜய், அஜித்!! பிளான் போட்டு தூக்கிய தயாரிப்பாளர்..
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அஜித், துணிவு படத்திற்கு பின் விடாமுயற்சி படத்தில் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் பூஜை போட்டாலும் இன்னும் ஷூட்டிங் ஆரம்பிக்காமல் இருந்து வருகிறது.
ஏற்கனவே படத்தின் அப்டே வரவில்லை என்று அஜித் ரசிகர்கள் ஏமாற்றத்தில் இருந்து வருகிறார்கள். படத்தில் அஜித்திற்கு யார் ஜோடியாக நடிக்கவுள்ளார் என்ற கேள்வி பலரிடம் எழுந்து வந்தது. அதில் பாலிவுட் நடிகைகளில் இருந்து நடிகை நயன் தாரா வரை பல பெயர்கள் அடிப்பட்டது.
இந்நிலையில் அஜித்தின் விடாமுயற்சி படத்தில் கதாநாயகியாக நடிக்க நடிகை திரிஷா கமிட்டாகி இருக்கிறார் என்ற செய்தி இணையத்தில் வெளியாகியுள்ளது. பேச்சுவார்த்தை நடைபெற்று இருந்த நிலையில் இப்படத்தில் கமிட்டாகி இருக்கிறாராம் திரிஷா.
ஏற்கனவே விஜய்யின் லியோ, மம்முட்டியின் ராம் : பார்ட் 1, தி ரோட் போன்ற படங்களில் நடித்தும் வந்தார். சமீபத்தில் தன்னைவிட 6 வயது குறைவான நடிகர் டோவினோ தாமஸ் நடிக்கும் ஐடண்ட்டிடி படத்திலும் கமிட்டாகியிருக்கிறார்.
என்னை அறிந்தால் படத்தில் கடைசியாக அஜித்துடன் ஜோடியாக நடித்திருந்தார் திரிஷா. தற்போது 8 வருடம் கழித்து அஜித் படத்திலும் கமிட்டாகி இருப்பது ரசிகர்கள் மத்தியில் இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.